கர்நாடக அரசு, 15-வது நிதிக் குழுவின் கீழ் 2025-26ஆம் நிதியாண்டுக்காக ரூ.124.5 கோடி மதிப்பிலான பெரிய தொகையை பெங்களூரு நகரின் போக்குவரத்து மற்றும் பொது இடங்களை மறுவடிவமைப்பதற்காக ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் தூய்மையான காற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நகரின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவின் நகர்ப்புறத் திட்டமிடலில் ஒரு புதிய "பாதசாரிக்கு முதலிடம்" என்பதை குறிக்கும் விதமாக, இந்த நிதியின் பெரும்பகுதி முதன்முறையாக Nagara Nade என்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, நகரம் முழுவதும் தடையற்ற மற்றும் நடந்து செல்லக்கூடிய நடைபாதைகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதன்மூலம், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் போன்ற அணுகுமுறைகளில் இருந்து விலகி, மக்கள் நடப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், இந்த திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

3 ஆண்டுகளில் ரூ.362 கோடி நிதி ஒதுக்கீடு : 15-வது நிதிக் குழுவிடம் இருந்து பெங்களூரு நகரம் தொடர்ந்து நிதியுதவி பெற்று வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் ரூ.115.5 கோடி மற்றும் 2024-25 ஆம் ஆண்டில் ரூ.122.3 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ஒதுக்கப்பட்ட நிதியையும் சேர்த்து, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.362 கோடிக்கும் அதிகமான நிதி பெங்களூருவுக்கு கிடைத்துள்ளது.
மேம்பாட்டுப் பணிகள் : இந்த நகரின் முக்கியப் போக்குவரத்துப் பாதைகளான தும்கூரு சாலை, பேனர்ஹட்டா சாலை, குண்டனஹள்ளி-ஐடிபிஎல் சாலை, மாரிகவுடா சாலை, கல்பாளி சாலை, உள்வட்ட சாலை, கப்பன் சாலை, சாங்கி சாலை மற்றும் என்ஜிவி சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் பெரிய மேம்படுத்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட இருக்கிறது.
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவரா நீங்க? முதல்ல இதை படிங்க
பிடிஎம் லேஅவுட், மகாதேவ்புரா, சிவாஜிநகர், ஜெயநகர், கே.ஆர். புரம் போன்ற பிஸியான பகுதிகளில் மக்கள் மறுவடிவமைக்கப்பட்ட சந்திப்புகள், அகலமான நடைபாதைகள், பிரத்யேக சைக்கிள் பாதைகள் மற்றும் பசுமையான தெருக் காட்சிகளை எதிர்பார்க்கலாம்.
மெட்ரோ இணைப்பு : மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான கடைசி மைல் இணைப்பை மேம்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நல்லுரஹள்ளி, ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனை, பட்டந்தூர் அக்ரஹாரா, கெங்கேரி, நாயண்டஹள்ளி, மைசூரு சாலை மற்றும் தீபஞ்சலி நகர் ஆகிய மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் உள்ள நடைபாதைகளும் மேம்படுத்தப்பட உள்ளன.
மேலும், கே.ஆர். சர்க்கிள், ராஜ்பவன், சாலுக்கியா சர்க்கிள் மற்றும் ரேஸ்கோர்ஸ் சாலை போன்ற மையப் பகுதிகளை இணைக்கும் பிரத்யேக சைக்கிள் பாதைகள் அமைக்கப்படுவதால், மோட்டார் இல்லாத போக்குவரத்து சாத்தியமாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
நகரில் உள்ள 7 இடுகாடுகளில் (Banashankari, Wilson Garden, Harishchandra, Kallahalli, Mysuru Road, Peenya, Summanahalli) காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, உப்பக்கர் நகர் மற்றும் ஜாலஹள்ளி (ராஜா ராஜேஸ்வரி நகர் தொகுதி) போன்ற பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் திறந்தவெளிகளை பசுமையாக்க ரூ.1.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications