இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூர் தற்போது தண்ணீர் பிரச்சனையால் தத்தளித்து வரும் வேளையில் பலர் சொந்த ஊருக்கு செல்வதாகக் கூறினாலும், இன்றும் புதிய வீடுகளின் விற்பனை சிறப்பாக உள்ளது. அதேபோல் வாடகை வீட்டுக்கான டிமாண்ட் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில், இந்திய ரியல் எஸ்டேட் துறையில் செய்யப்படும் முதலீட்டுக்கு, வாடகை வருமானத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூர் முன்னிலையில் உள்ளது என புள்ளிவிவரங்கள் கூறுகிறது.

ரியல் எஸ்டேட் சொத்து ஆலோசனை நிறுவனமான அனாராக் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பெங்களூரு நகரம் 4.45 சதவீத வாடகை வருமானத்தை ஈட்டியுள்ளது. இது 2019 ஆம் ஆண்டிற்கான தொற்றுநோய் பரவல் முந்தைய அளவான 3.6% ஒப்பிடும்போது சுமார் 24% அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
பெங்களூரில் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலகட்டத்தில் வாடகை வீட்டுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாடகை வருமானம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ஐடி நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் சேவையை மொத்தமாக ரத்து செய்த காரணத்தால் சொந்த ஊரில் இருந்து அனைவரும் அலுவலகம் இருக்கும் பெரு நகரங்களுக்குத் திரும்பிய காரணத்தால் வாடகை வீட்டுக்கான டிமாண்ட் அதிகரித்து. இது நாட்டின் அனைத்து பெரு நகரங்களிலும் நடந்தாலும், பெங்களூரில் அதிக எண்ணிக்கையிலான ஐடி நிறுவனங்கள் இருப்பதால் டிமாண்ட் பெரிய அளவில் உயர்ந்தது.
வாடகை வருமானம் என்றால் என்ன..?: வாடகை வருமானம் என்றால் வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானம் என எளிதாக சொல்ல முடியும். ஆனால் உண்மையில் இதன் விளக்கம் வேறு.
வாடகை வருமானம் என்பது சொத்து உரிமையாளர் வாடகையாகப் பெறும் வருமானத்தின் மூலம் ஈட்டப்படும் முதலீட்டு மீதான வருமானம் (ROI) ஆகும். அதாவது ஒருவர் முதலீடு செய்து வாங்கும் சொத்தில் கிடைக்கும் வருமானத்தில் அவரது லாபகரத்தை அளவிடும் ஒரு வழியாகும்.
உதாரணம்:
நீங்கள் ரூ.1 கோடி (ரூ.10,000,000) மதிப்புள்ள ஒரு சொத்தை வைத்திருப்பதாகவும், அது மாதம் ரூ.50,000 வாடகையை ஈட்டுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். வாடகை வருமானத்தைக் கணக்கிடும் முறையை இப்போது பார்ப்போம்.
வருடாந்திர வாடகை வருமானம்: மாத வாடகை x 12 மாதங்கள் = ரூ.50,000/மாதம் * 12 மாதங்கள் = ரூ.6,00,000/ஆண்டு
வாடகை வருமானம்: (ரூ.6,00,000 / ரூ.1,00,00,000) x 100 = 6%
இந்த உதாரணத்தில், வாடகை வருமானம் 6% ஆகும். எனவே, சொத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1 கோடிக்கும், நீங்கள் ஆண்டுதோறும் ரூ.6 லட்சம் வாடகை வருமானத்தை ஈட்டுகிறீர்கள்.
இதன் படி இந்தியாவில் அதிகப்படியான வாடகை வருமானம் அளிப்பது பெங்களூர் என சந்தை ஆய்வு முடிவுகள் கூறுகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வீட்டு வாடகை அளவு பெங்களூரில் 4.45 சதவீதமாக உள்ளது.
பெங்களூருக்கு அடுத்தபடியாக மும்பையில் 4.15% வாடகை வருமானத்துடன் 2வது இடத்தில் உள்ளது, இது 2019 இல் 3.5% ஆக இருந்தது மூலம் 19% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து கூர்கான், புனே, கொல்கத்தா, நொய்டா ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.
சென்னையில் 2019ல் 2.7 சதவீதமாக இருந்த வாடகை வருமானம், 2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 3.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications