இந்தியாவின் முக்கிய ஐடி மையமாக விளங்கும் பெங்களூரு, தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணி இடத்தில் இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் என்பது அந்நகர மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அங்கு வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சாலைகளின் அளவு மற்றும் வசதிகள் அதற்கேற்ப வளர்ச்சி அடையவில்லை. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பல கிமீட்டர்கள் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், வேலைக்கு செல்வதற்கும், வருவதற்கும் கடும் தாமதம் ஏற்படுகிறது. தேவையின்றி எரிபொருள் வீணாகிறது. காற்று மாசுபாடு ஏற்படுகிறது. மேலும், உடல் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், அதிக திறன் கொண்ட மெட்ரோ ரயில்கள், பேருந்துகள், சைக்கிள் பாதைகள் மற்றும் வேலை நேரங்களில் சரியான திட்டங்களை அரசு விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என பெங்களூரு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், பெங்களூருவில் நள்ளிரவு 3.30 மணிக்கும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக ரெடிட் சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவர், இந்திராநகர் பகுதியில் இருந்து மான்யதா டெக் பார்க் நோக்கி Outer Ring Road (ORR) வழியாக செல்லும்போது, அதிகாலை நேரத்திலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாக தெரிவித்துள்ளார். பொதுவாக போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்திரா நகரில் இருந்து மான்யதா தொழில்நுட்ப பூங்காவுக்கு ORR வழியாக செல்ல எனக்கு 30-40 நிமிடங்கள் தான் ஆக வேண்டும். ஆனால், அதிகாலை 3:30 மணிக்கு செல்லும்போது எனக்கு இரண்டு மணி நேரம் ஆனது.
கடந்த 10 ஆண்டுகளாக நான் பெங்களூருவில் தான் வசித்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நகரத்தின் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பின் நிலை மோசமாகிக்கொண்டே தான் இருக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இதை ஒரு "டிக் டிக் டைம் பாம்" எனக் கூறிய அந்த பயனர், பெங்களூரு நகரத்தின் நிலைமை இன்னும் மேம்படாமல் இருப்பது பொதுமக்களின் வாழ்வதாரத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். இந்த நபர், அதிகாலை பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால், அந்த சாலை முழுவதுமாக மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிக மோசமாக இருந்ததாக தனது அனுபவத்தை சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.
இதற்கு பயனர் ஒருவர், பெங்களூருவில் உள்ள எலிமென்ட்ஸ் மால் அருகே ஓவர்பிரிட்ஜ் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு பீம்கள் சாலைக்கு நடுவே சரிந்து விழுந்தன. சாலையில் கண்ணாடித் துண்டுகள் கிடந்ததை நான் நேரில் பார்த்தேன். அது ஒரு கார் மீது விழுந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. இன்று அங்கு பரபரப்பு நிலவியிருக்கும். சாலைகளும் மூடப்பட்டிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தொடர்ந்து, பலரும் சமூக வலைதளங்களில் தங்களது அனுபவங்களையும் பகிரத் தொடங்கினர். சிலர், "சர்வதேச அளவில் ஐடி நகரமாக இருந்தாலும், அடிப்படை போக்குவரத்து மேலாண்மை இல்லை" என விமர்சித்துள்ளனர். இன்னும் சிலர், பெங்களூருவில் இருப்பவர்கள் புகார் அளிப்பதில் மட்டுமே மும்முரமாக இருக்கிறார்கள். அதற்கான மாற்றத்தை கொண்டு வர யாரும் முயற்சிக்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் மற்றும் நகர வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகள் குறித்து மக்கள் வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் இதனால் ஏற்படும் மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். சிலர் நகைச்சுவையுடன், சாதாரணமாக ஏற்று வருகின்றனர். சிலர் சமூகத்திற்கான மாற்றங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் வெறும் புகார்கள் மட்டுமே செய்வதாக கோபப்படுகின்றனர்.
இது, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இன்று காணப்படும் சமூக மனப்பான்மையை நன்றாக பிரதிபலிக்கிறது. அதாவது, மக்கள் ஒன்றிணைந்து செயல்படாமல் இருப்பதால், பிரச்சனைகள் தொடர்ந்தும் தீவிரமாக மாறுவதற்கான அபாயமும் உள்ளது என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications