பெங்களூரின் முக்கிய சிறப்புகளில் டிராபிக் முக்கியமான விஷயம், அதிலும் புதன்கிழமை சற்றும் எதிர்பாராத விதமாக அவுட்டர் ரிங்க் சாலையில் ஏற்பட்ட டிராபிக் குறித்து ஓட்டுமொத்த இந்தியாவே பேசிய நிலையில் பெங்களூர் ஐடி நிறுவனங்கள் 15 பில்லியன் டாலர் பணத்தை யார் பொறுப்பு என்ற கேள்வியுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
பெங்களூர் அவுட்டர் ரிங்க் சாலையில் இருக்கும் தொழில்நுட்ப பூங்காக்கள், ஐடி/ஐடிஸ் நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனங்களின் அமைப்பான அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் அசோசியேஷன் (ORRCA) முக்கியமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

இந்த அறிகிகையில் பெங்களூரின் டெக் காரிடாரில் கேஆர் புரம் மற்றும் சென்டரல் சிலக் போர்ட் வரையிலான 17 கிமீ சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமா ஆண்டுக்கு 15 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளது.
'பிராண்ட் பெங்களூரு' கேம்பெயின் ஒரு பகுதியாக கர்நாடக அரசுக்கு ORRCA அமைப்பு சமீபத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் அவுட்டர் ரிங் ரோட்டில் சராசரி பீக் நேரத்தில் வாகனங்களின் வேகம் வெறும் 4.4KMPH இதேபோல் வாகனங்கள் சுமார் 3 கி.மீ வரையில் நிற்பதாக தெரிவித்துள்ளது.
அவுட்டர் ரிங் ரோடு அதாவது கேஆர் புரம் முதல் சில்க் போர்டு வரையிலான டெக் காரிடாரில் சுமார் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 9.5 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். பெங்களூர் நகரின் மொத்த வருவாயில் ஐடி துறையினரின் வருவாய் பங்கீடு சுமார் 36 சதவீதம். இது ஆண்டுக்கு 32.68 பில்லியன் டாலர்கள் என விளக்கியுள்ளது.
அதிகப்படியான டிராபிக் காரணமாக நீண்ட நேர பயணங்கள் மற்றும் மன அழுத்தம் பணியாளர்களின் உற்பத்தித் திறன் மற்றும் நல்வாழ்வை பாதிக்கிறது, இதன் விளைவாக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் ORRCA அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 27 அன்று மாலை, பெங்களூரு அவுட்டர் ரிங் ரோட்டில் வழக்கத்திற்கு மாறாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அலுவலகத்திற்குச் செல்வோர் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். இதில் சில பள்ளி பேருந்துகள் கூட இந்த மோசமான கிரிட்லாக் டிராபிக்-ல் சிக்கியதாகவும் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications