பெங்களூரின் டிராபிக் பிரச்சனையை தொடர்புபடுத்தி சீஇஓ முதல் சாமானிய மக்கள் வரையில் பல குறைகளை கூறியதுண்டு, ஆனால் இந்த ஒரு விஷயம் மிகவும் புதிதாக உள்ளது. பெங்களூக் டிராபிக் இப்போது டேட்டிங், காதலிப்பவர்களுக்கும் பெரும் பிரச்சனையாக மாற்றியுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். சமீபத்தில் இன்ஸ்டா வீடியோவில் ஒரு பிரபலம், தனது சொந்த டேட்டிங் அனுபவத்தை பகிர்ந்தார் இது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
இன்ஸ்டாகிராமரான pearl_rits தனது வீடியோவில், தனது டேட்டிங் அனுபவத்தைப் பகிர்ந்து இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூரில் இளைஞர்கள் எதிர்கொள்லும் புதிய விதமான பிரச்சனையை விளக்கியுள்ளார்.

pearl_rits தனது வீடியோவில் கூறியதாவது: "சமீபத்தில் நான் Hinge என்ற டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்தேன், அங்கு சில matches கிடைத்தன. அப்படி ஒருவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தபோது, நான் அவரிடம் எங்கே வசிக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் ஜே.பி.நகரில் இருப்பதாகவும், என்னிடம் எங்கு இருக்கிறீர்கள் என கேட்டார். நான் வைட்டிஃபீல்ட்டில் இருப்பதாகக் கூறினேன்.
அதற்கு அவர், 'அது மிகவும் தூரமாக இருக்கிறது' என்று சொன்னார். நான் 'ஆம்' என்று கூறினேன். பின்னர் அவர், 'நம்மிடையே ஒத்துப்போனாலோ, இந்த டேட்டிங்-ஐ அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாலோ, நாம் சந்திக்க பல மணி நேரம் பணிக்க வேண்டியிருக்கும். பெங்களூர் டிராபிக்கில் செல்ல வேண்டி இருக்கும், எனவே இந்த டேட்டிங்-ஐ இங்கே நிறுத்தலாம்' என்று கூறினார். அது நியாயமான கருத்துக்கு நானும் உடன்பட்டேன்.
பெங்களூருவில் வசிப்பவர்கள் தூரத்தில் இருக்கும் தங்களுக்கு விருப்பமானவர்கள், காதலர்களை கூட சந்திக்க தயாராக இல்லை." இந்த அனுபவம், பெங்களூரு போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் எவ்வாறு தனிப்பட்ட உறவுகளை கூட பாதிக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது என கூறினார்.
மேலும் pearl_rits தனது வீடியோவில் பேசுகையில், "நீங்கள் வைட்டிஃபீல்ட், யலஹன்கா, எலக்ட்ரானிக் சிட்டி, அல்லது கோரமங்கலா போன்ற தொலைதூர இடங்களில் இருந்து உங்களை சந்திக்க வரும் நண்பர்களின் அருமையை புரிந்து, அவர்களை ஒரு தெய்வம் போல நடத்துங்கள்." என்று கூறி வீடியோ முடித்தார்.
இந்த வீடியோ, பெங்களூரு ஐடி ஊழியர்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடம் பிரபலானது. பெங்களூர் நகரின் டிராப்பிக் பிரச்சனையை சரி செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், இது பலன் அளிக்காமல் போகிறது.


Click it and Unblock the Notifications