பெங்களூரு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதற்காகவும், பெங்களூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் டெக் நிறுவனமான Mappls MapmyIndia முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்துள்ளது.
இந்த நிறுவனம் பெங்களூருவுக்கு என்று தனியாக ஒரு navigation app அதாவது MAP செயலியை உருவாக்கவும், இதில் பெங்களூர் பயணிகளுக்கு ரியல் டைம் அடிப்படையில் டிராபிக் அப்டேட்களை வழங்கவும் உள்ளது.

இந்த புதிய மேப் செயலி, பயணிகளுக்கு போக்குவரத்து நெரிசல் குறைவான சாலைகளைக் காட்டுவதன் மூலம், அவர்கள் விரைவாக இலக்கை அடைய உதவும். மேலும், போக்குவரத்து நெரிசல், சாலைகள் மூடப்படுதல் மற்றும் சாலைகளின் நிலை குறித்த பிற தகவல்களையும் ரியல் டைம் அடிப்படையில் Mappls MapmyIndia நிறுவனத்தின் செயலி வழங்கும்.
பெங்களூரு பயணிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த செயலி, கூகுள் மேப்ஸ் செயலிக்கு மாற்றுத் தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் டிராபிக்-ன் உண்மை தன்மையை பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிகிறது.
இந்த புதிய செயலி குறித்து பெங்களூர் நகர மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில் “இந்த மேப் செயலி போக்குவரத்து காவல்துறைக்கும் நெரிசலைக் கண்டறிந்து, ரியல் டைம் அடிப்படையில் அதைக் களைவதற்கு உதவும்.
வழக்கமான பாதையில் அதிக போக்குவரத்து இருக்கும்போது, பயணிகள் வேறு வழியைக் கண்டறியவும் இது உதவும். மேலும், குண்டும் குழிகள், சாலை மறியல்கள் மற்றும் பிற பராமரிப்பு பணிகள் பற்றியும் இது மக்களுக்குத் தகவல் கொடுத்து, நேரத்தை மிச்சப்படுத்தும்,” என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரு போக்குவரத்து காவல்துறை நகரில் போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இணைந்த கேமராக்களைப் பயன்படுத்துகிறது.
AI கேமரா குறித்து பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் DK சிவகுமார், “தினசரி ஆயிரக்கணக்கான புதிய வாகனங்கள் நகரத்திற்கு வருகின்றன. பெங்களூருவில் போக்குவரத்தைக் கையாள்வது சவாலான பணியாகும். வாகனங்களின் இயக்கத்தைக் கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க செயற்கை நுண்ணறிவு (AI) ஐப் பயன்படுத்துகிறோம். போக்குவரத்து மேலாண்மைக்கான சிறந்த திட்டத்தை வகுப்பதற்காக BBMP உடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மேலும், அதிகாரிகள் வளர்ந்த நாடுகளின் போக்குவரத்து மேலாண்மை முறைகளை ஆய்வு செய்து, இங்கும் அவற்றைப் போன்ற உத்திகளைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
புதிய மேப் செயலி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவை பெங்களூரு போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications