இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தற்போது போக்குவரத்து விதிகளை கடுமையாக்கப்பட்டு, அபராதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஏஐ கேமரா வைத்து கப்பு கப்பென பிடிக்கும் காரணத்தால் வாகன உரிமையாளர்கள் அபராதம் செலுத்துவதற்கு பயந்து வாகனத்தை ஓட்டுகின்றனர்.
இந்த நிலையில் டெக் நகரமான பெங்களூரில் ஏழுமலை என்பவர் 255 முறை போக்குவரத்து விதிகளை மீறிய காரணத்தால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அபராதம் குறித்து முழுமையாக தெரியாமல் தொடர்ந்து வண்டியை ஓட்டி வந்த நிலையில் தற்போது டிராபிக் போலிசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சமீபத்தில் பெங்களூர் டிராபிக் போலீசார் 50க்கும் மேற்பட்ட விதிமீறல்களைக் மேற்கொண்ட வாகன உரிமையாளர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக ஏழுமலை வழக்கு டிரெண்டாகியுள்ளது.
தினசரி கூலித் தொழிலாளியான அந்த ஏழுமலை, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விதிமீறல்களைக் செய்துள்ளார். இதன் மூலம் 255 முறை போக்குவரத்து விதிமீறல்களுக்கு சுமார் 1.34 லட்சம் ரூபாய் அபராதத்தை காவல்துறையினரால் விதிக்கப்பட்டு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் ஏழுமலை, 10,000 ரூபாய் மட்டுமே செலுத்தி, 20 வழக்குகளை மட்டுமே தீர்த்துள்ளார். இதனால் பெங்களூரு போக்குவரத்து போலீசார், அவரது சுசுகி அக்சஸ் ஸ்கூட்டரை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழுமலை தனது வீட்டின் அருகே பொருத்தப்பட்ட நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) கேமரா இருப்பது பற்றி தெரியாத காரணத்தால், கடந்த மூன்று வருடங்களாக ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து கேமராக்களைத் தாண்டிச் சென்றுள்ளார். இதற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது 1.34 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறகு, 50க்கும் மேற்பட்ட விதிமீறல்களைக் கொண்ட வாகனங்கள் குறித்த தரவுகளை போலீசார் சேகரித்து வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications