பெங்களூர்வாசிகளை மிரட்டும் டிராபிக் கேமரா.. வண்டி 70000 தான் அபராதம் ரூ.3.25 லட்சம், அடுத்த சம்பவம்!

சென்னை, பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெரு நகரங்களில் சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபவர்களை நிறுத்தி அபராதம் விதிப்பது என்பது போக்குவரத்து காவல்துறைக்கு மிகவும் சவாலான விஷயம்.

இதற்காக நவீன தொழில்நுட்ப கேமராக்களை முக்கியமான சாலைகளில் போலீசார் நிறுவி வருகின்றனர். இந்த கேமராக்கள் சாலைகளில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றன.

பெங்களூர்வாசிகளை மிரட்டும் டிராபிக் கேமரா.. வண்டி 70000 தான் அபராதம் ரூ.3.25 லட்சம், அடுத்த சம்பவம்!

இந்த கேமராக்கள் இருப்பது தெரியாமல் பலர் போலீசார் இல்லை என்ற தைரியத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுகின்றனர். ஆனால் கேமராக்கள் அபராதம் விதிப்பதோடு, அது குறித்த தகவலை வாகன உரிமையாளருக்கு எஸ்எம்எஸ் வாயிலாக தகவல் அனுப்பிவிடும்.

சில சமயங்களில் அபராதம் செலுத்துங்கள் அல்லது செலுத்தவில்லை என்று வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ய வரும்போதுதான் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட தகவல் தெரியவரும். இது போன்ற நிகழ்வை பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் சந்தித்துள்ளார். அதுவும் அபராதம் தொகை ரூ.3 லட்சத்தை தாண்டிய பிறகுதான் அந்த பெண்மணிக்கு தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு முதல் 634 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதற்காக ரூ.3 லட்சத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமீறல் குற்றங்கள் எல்லாம் ஆட்டோமேடிக் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை சிஸ்டம் கேமராக்களில் பதிவாகி உள்ளன.

இதனையடுத்து போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணின் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். அந்த பெண்ணின் மாலா என்பதும், அவர் ஒரு கல்லறை தொழிலாளி என்பது தெரியவந்துள்ளது.

மாலாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் பெரும்பாலானவை ஹெல்மெட் அணியாதது, வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசியது. கடைசியாக அவர் டிசம்பர் 17ம் தேதியன்று ஒரு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டார். 634 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மொத்தம் ரூ.3.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது அந்த ஸ்கூட்டரின் விலையை காட்டிலும் அபராதம் நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அபராதம் செலுத்தாததால் அந்த ஸ்கூட்டரை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அபராதம் தொடர்பாக மாலாவுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

அதன் பிறகுதான், மாலாவுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து மாலா தனது கணவரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். உடனே அவரது கணவர் காவல்துறையை அணுகி, தங்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என்றும், வாகனத்தை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் போலீசார் மறுத்து விட்டனர்.

மாலாவை போல் வேறோரு நபரும் அதே போன்ற அனுபவத்தை சந்தித்துள்ளார். அந்நகரை சேர்ந்த ஏழுமலை என்ற நபருக்கு 255 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மொத்தம் ரூ.1.34 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் ரூ.10,000 மட்டுமே செலுத்தி 20 வழக்குகளை முடித்தார். இதனால் அவரது ஸ்கூட்டரை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+