பெங்களூர் போலீஸ் என்ன இப்படி இறங்கிட்டாங்க.. அட பாவமே..!!

பெங்களூர்: இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமாக பெங்களூர்இருக்கிறது. இங்கே நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் ஜாயின் தி கம்யூட் (Join The Commute) என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை பெங்களூர் நகர போக்குவரத்து காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.

இதன்படி பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகள் என்னென்ன சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை அனுபவ ரீதியாக தெரிந்து கொள்வதற்காக அவர்களுடனே பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தெற்கு பெங்களூர் போக்குவரத்து காவல்துறைக்கான துணை ஆணையர் சிவப்பிரகாஷ் தேவராஜு ஜாயின் தி கம்ப்யூட் (Join The Commute) என்ற ஒரு புதிய இயக்கத்தை இதற்காக தொடங்கியுள்ளார்.

பெங்களூர் போலீஸ் என்ன இப்படி இறங்கிட்டாங்க.. அட பாவமே..!!

இது தொடர்பாக மணிகண்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள தேவராஜு இந்தியாவிலேயே பெங்களூரில் தான் இப்படி ஒரு புதிய முயற்சி எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக jointhecommutebstp.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இவ்வாறு பதிவு செய்து கொள்பவர்களை போக்குவரத்து காவல்துறையினர் தொடர்பு கொண்டு அவர்கள் எங்கிருந்து அலுவலகத்திற்கு புறப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவர்களுடனேயே பயணம் செய்வார்களாம்.

பெங்களூர் போலீஸ் என்ன இப்படி இறங்கிட்டாங்க.. அட பாவமே..!!

ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று பேரை தேர்வு செய்து அவர்களோடு பயணம் செய்து குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் பீக் ஹவர்களில் பயணம் செய்ய இருப்பதாக தேவராஜு தெரிவித்துள்ளார்.

இவர்கள் தினம்தோறும் ஒரே பாதையிலேயே பயணம் செய்வதால் அந்தப் பாதையில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்பது குறித்து போக்குவரத்து காவல்துறையாகிய தங்களை விட அவர்களுக்கு அதிகமாக தெரியும் என்பதால் இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்து இருப்பதாக கூறியுள்ளார்.

முதல் கட்டமாக பெங்களூரின் தெற்கு நகர பிரிவில் இதனை தொடங்கியுள்ளதாகவும் இது வெற்றியடையும் பட்சத்தில் பெங்களூர் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

பெங்களூரின் சில பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, அத்தகைய இடங்களில் போக்குவரத்து காவல்துறையினரால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால் சிக்னல் டைம்களை மாற்றுவது, யூ டர்ன்களை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றை செய்ய முடியும் என கூறியுள்ளார்.

இவ்வாறு வாகன ஓட்டிகளோடு பயணம் செய்யும்போது போக்குவரத்து காவல்துறையினர் பாடி வோர்ன் கேமராவை பயன்படுத்துவார்கள் என்றும் அதில் அவர்களது அனுபவம் முழுவதும் பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அந்த சாலையில் போக்குவரத்தை மேம்படுத்த தேவையான வசதிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இந்த தளத்தில் பதிவு செய்து தினமும் அவர்கள் எந்த பாதையில் பயணம் செய்கின்றனர், அவர்கள் பேருந்துகள், கார் அல்லது இருசக்கர வாகனம் என எதில் பயணம் செய்கிறார்கள் என்பது குறித்து பதிவு செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களோடு போக்குவரத்து துறையை சார்ந்த மூத்த அதிகாரிகள் பயணம் செய்வார்கள். இதன் அடிப்படையில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என தேவராஜூ தெரிவித்துள்ளார்.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+