பெங்களூரு: இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமாக பெங்களூரு இருக்கிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்க பெங்களூரு நிர்வாகமும் கர்நாடக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என பெங்களூரு நகர போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
பொது போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும், கார்பன் வெளியீடு குறையும், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த நகரத்தை நாம் விட்டுச் செல்ல முடியும் என பெங்களூரு நகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

உலக பொது போக்குவரத்து தினத்தை முன்னிட்டு பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் ஐடி ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
பெங்களூருவில் பணியாற்றும் 50% ஐடி ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் அங்கே போக்குவரத்து நெரிசல் 20% வரை குறையுமாம். பெரும்பாலான ஐடி நிறுவன ஊழியர்கள் அவர்களுடைய சொந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர்.
மேலும் அலுவலகங்கள் சார்பாகவும் அவர்களுக்கு கார்கள் உள்ளிட வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதுவே பீக் அவர்களில் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைகிறது என சொல்லப்படுகிறது.
உலகப் பொதுப் போக்குவரத்து தினத்தை முன்னிட்டு பெங்களூரு நகர காவல் ஆணையர் தலைமையில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் பொதுமக்களை சந்தித்து பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
தங்களால் இயன்றவரை பொது போக்குவரத்தை பயன்படுத்துவோம் என அப்போது மக்களை வாக்குறுதியும் எடுக்கச் செய்தனர். பொது போக்குவரத்தை பயன்படுத்துவோம் , குறைந்த தொலைவிலான இடங்களுக்கு நடந்து செல்வோம் அல்லது சைக்கிளை பயன்படுத்துவோம், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து நடைமுறைகளுக்கு மாறுவோம் என இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில காவல் ஆணையர் தயானந்தா அரசு பேருந்து, மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துவது மூலம் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் குறையும் அத்தோடு காற்று மாசு குறையும் என கூறினார்.
அனைவரும் தங்களுடைய சொந்த வாகனங்களில் பயணம் செய்வதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்று விடுகிறது என்றும் இதனால் நகரில் காற்று மாசு அதிகரித்து அது நகரவாசிகளின் உடல் நலனை பெருமளவில் பாதிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலால் சில சமயங்களில் நகரமே ஸ்தம்பித்து போய்விடுகிறது. எனவே அதனை தடுக்க செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் போக்குவரத்து கண்காணிப்பு, முன் கூட்டியே அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நேரலையில் டிராபிக் அலர்ட் கொடுப்பது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
More From GoodReturns

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications