பெங்களூர்: பெங்களூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. தற்போது அனைவரும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என நிறுவனங்கள் அறிவித்து விட்டதால் பீக் அவர்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. இதனிடையே இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகன்தாஸ் பாய், பெங்களூரு போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு ஒரு தீர்வினை கூறியுள்ளார்.
பெங்களூர் நகரை போலவே டிஜிட்டல் முறையில் ஒரு நகரத்தை உருவாக்கி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார். அதாவது பெங்களூரில் ஏன் இவ்வளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிவது மிக அவசியம் என கூறியுள்ளார்.

குறிப்பாக எந்தெந்த இடங்கள் எல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை தீர்த்தாலே போதும் என தெரிவித்துள்ளார்.
சிம்போசியம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் பெங்களூருவில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசு துறையை சார்ந்தவர்கள் போக்குவரத்து காவல்துறையினர் என அனைவரும் இணைந்து தான் இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு ஒரு தீர்வினை காண முடியும் என தெரிவித்தார்.
இதுபோன்ற நகர்ப்புற பகுதி பிரச்சனைகளை தீர்ப்பதில் நிபுணராக இருக்கக்கூடிய ஆர் கே மிஸ்ரா போன்றவர்கள் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். பெங்களூர் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை தீர்ப்பதற்கு சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு பணியாற்ற வேண்டும் என தெரிவித்த அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெங்களூர் நகரின் டிராபிக் பிரச்சனை குறித்து டிஜிட்டல் முறையில் ஒரு வரைபடத்தை உருவாக்க வேண்டும், அதில் ஐந்து ஆண்டுகளில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் அதிகமாக போக்குவரத்து நெரிசல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, அதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும் என்றார்.
அந்த பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதைகளை போடுவது அல்லது கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்குவது உள்ளிட்டவற்றை செய்தால் போக்குவரத்து நெரிசல் குறையுமா என்பது குறித்து டிஜிட்டல் முறையிலேயே பரிசோதித்து பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .
இவ்வாறு செய்யும்போது டிராபிக் பிரச்சனைக்கு தொழில் நுட்ப ரீதியிலான அதே வேளையில் நிரந்தரமான ஒரு தீர்வினை காண முடியும் என கூறியுள்ளார். பெங்களூர் நகரை டிஜிட்டல் முறையில் உருவாக்கி அதில் டிராபிக் பிரச்சனையை தீர்ப்பதற்காக நம்மிடம் இருக்கும் யோசனைகளை எல்லாம் செயல்படுத்தி அந்த விவரங்களை அரசு அமைப்புகளிடமும் பெங்களூர் மாநகராட்சி இடமும் ஒப்படைத்து அதன் அடிப்படையில அவர்களை செயல்பட செய்ய வேண்டும், இவ்வாறு செய்யும்போது போக்குவரத்து பிரச்சனைக்கு நிச்சயமாக தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார் .
ஏற்கனவே பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக போக்குவரத்து காவல்துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இதன் ஒரு பகுதியாக தான் டிராபிக் குவாலிட்டி இன்டெக்ஸ் என்பது அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு நிகழ்நேர டிராபிக் அலர்ட்டுகளை வழங்கும் வசதி கொண்டு வரப்பட்டது.
Written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications