பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு விடிவுகாலம் !! இத முன்னாடியே செஞ்சிருக்கலாமே!!

பெங்களூரு: இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூர் நகரம் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. பெங்களூர் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை தீர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இருந்தாலும் இந்த பிரச்சனை முடிவதாக தெரியவில்லை.

பெங்களூரின் அவுட்டர் ரிங் சாலை பெங்களூரு நகரிலேயே அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக உள்ளது. குறிப்பாக காலை 9 மணியிலிருந்து 10 மணி வரை பீக் அவர்களில் இந்த சாலையை கடப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்த சூழலில் தான் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் , பல்வேறு ஐடி நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் அண்மையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு விடிவுகாலம் !! இத முன்னாடியே செஞ்சிருக்கலாமே!!

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பீக் அவர்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து முக்கியமான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. பெங்களூர் அவுட்டர் ரிங் சாலையை பொருத்தவரை ஐடி காரிடாருக்கு செல்லக்கூடிய சாலை என்பதால் இங்கே டிராபிக் பிரச்சினை தீர்ப்பதில் ஐடி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது என பெங்களூரு மாநகராட்சி கருதுகிறது.

அவுட்டர் ரிங் சாலை வழியே செல்ல வேண்டிய ஐடி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு வேலை நேரத்தை மாற்றி அமைப்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் அனைவருக்கும் அலுவலகத்தை திறக்காமல் சில அலுவலகங்களை காலை 7 மணி அளவில் திறப்பதன் மூலம் பீக் அவர்களில் அதிகமான ஊழியர்கள் சாலைகளில் பயணம் செய்வது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாரங்களிலுமே புதன்கிழமைகளில் ஐடி ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தருவது என பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது .இதன் மூலம் வாரத்தின் ஒரு நாள் சில உள் கட்டமைப்பு மேம்பாடு வேலைகளையும் செய்து முடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அவுட்டர் ரிங் சாலையில் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன அதனை தீவிரமாக முடிப்பது என மாநகராட்சி தரப்பில் அப்போது உறுதி தரப்பட்டிருக்கிறது.

மேலும் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் தனிப்பட்ட வாகனங்களில் வருவதை குறைக்கும் வகையில் பேருந்து வசதிகளை கொண்டு வரலாம் என்றும் ஒரே இடத்தில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தங்களுடைய ஊழியர்களுக்கு என பேருந்து வசதிகளையும், கார் வசதிகளையும் ஏற்படுத்தலாம் என பரிந்துரை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த பகுதிகளில் எல்லாம் சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஐடி ஊழியர்களுக்கு நிகழ் நேர போக்குவரத்து நெரிசல் விவரங்களை தருவதற்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பீக் அவர்களில் அவுட்டர் ரிங் சாலையில் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என ஐடி நிறுவனங்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

written by : Devika Manivannan

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+