பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் பிரச்சினை, வெயில் காலங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால் எது மாறுதோ இல்லையோ பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை மட்டும் மாறவே கிடையாது.
வேலை நிமித்தமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பெங்களூருவை நோக்கி வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். ஐடி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் சாலை உள்கட்ட அமைப்புகளை மாநில அரசு மேம்படுத்தவில்லை. இதன் காரணமாக பெங்களூரு போக்குவரத்து பிரச்சனை தீவிரமான ஒன்றாக மாறி இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை போக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இந்த பிரச்சினை தீராத ஒன்றாக இருக்கிறது.

ஒரு நபர் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுவலகத்திற்கு மூன்று மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது என கூறி இருக்கிறார். சௌரியா சஹி என்ற ஒரு ஐடி ஊழியர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நான் தினமும் அலுவலகத்திற்கு செல்ல மட்டுமே 3 மணி நேரம் ஆகிறது என குறிப்பிட்டு இருக்கிறார். நான் வீட்டில் இருந்து 9 மணிக்கு அலுவலகம் கிளம்புகிறேன் என்னுடைய அலுவலகம் 6 கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது, ஆனால் நான் 12 மணிக்கு தான் அலுவலகம் சென்றடைகிறேன் என கூறியுள்ளார்.
என்னுடைய சொந்த காரை எடுத்து இந்த போக்குவரத்து நெரிசலில் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்வதற்குள் மன அழுத்தம் ஏற்படுகிறது என கூறியிருக்கிறார் . வாடகைக்கு வாகனம் பதிவு செய்தால் வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதற்கு மட்டுமே 600 ரூபாய் கேட்கிறார்கள் என கூறி இருக்கிறார். தினமும் ஒரு ஊழியர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கிறார் என்பதற்காகவே நாங்கள் அலுவலகக் கூட்டங்களை தள்ளி போட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என தன்னுடைய பதிவில் சுட்டி காட்டி இருக்கிறார்.
என்னுடன் பணிபுரிவர்களில் அரை கிலோமீட்டர் தொலையில் இருப்பவர்கள் அலுவலகத்திற்கு நடந்தே வந்து விடுகின்றனர். பெங்களூரு போன்ற ஒரு நகரில் இப்படி ஒரு பிரச்சனை நீண்ட காலமாக இருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என குறிப்பிட்டு இருக்கும் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு வெளிநாடுகளிலும் வேலை கிடைத்தது பெங்களூரிலும் வேலை கிடைத்தது . ஆனால் நான் பெங்களூருவை தான் தேர்வு செய்தேன், இப்போது பெங்களூரு வேண்டாம் என தோன்றுகிறது என கூறியுள்ளார்.
சௌரவின் எக்ஸ் பதிவு லட்சக்கணக்கானவர்களின் பார்வையை பெற்றுள்ளது. பலரும் பெங்களூரு போக்குவரத்து நெரிசலால் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications