இந்திய ஸ்டார்ட்அப் துறையில் பல நிறுவனர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ZOHO நிறுவனத்தைச் சென்னையில் துவங்கிய உலகம் முழுவதும் சேவை வழங்கும் ஒரு ப்ராடெக்ட் நிறுவனமாக அசத்தி வருகிறது. இந்திய டெக் நிறுவனங்கள், சேவை துறையில் மட்டும் தான் சாதிக்க முடியும் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்களுக்குப் போட்டியாகச் சென்னையில் உருவானது தான் ZOHO.
இன்று ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் பெரும் முதலீட்டை ஈர்த்து அதை ஆதாரமாக வைத்து, வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் ZOHO பூட்ஸ்டாராப் முறையில் அதாவது வெளிச் சந்தையில் முதலீடு ஈர்க்காமல் தனது வர்த்தகத்தில் இருந்து வருமானத்தை ஈட்டி அதை வைத்தே மாபெரும் சாம்ராஜ்ஜியமாக வளர்ந்து நிற்கிறது ZOHO.

இந்த அத்தனை பெருமைக்கும் உரியவர் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, சமீபத்தில் இவர் குளோபல் ஏஐ மாநாட்டில் கலந்துகொள்ளப் பெங்களூரு வந்திருந்தார். ஜோஹோ நிறுவனம் உருவாக்கி வரும் சிறிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்கள் குறித்து இக்கூட்டத்தில் பேசினார்.
அதேதொடர்ந்து இக்கூட்டத்தில் பெங்களூரின் பிரபலமான டிராபிக் பிரச்சனை குறித்து அவர் பேசுகையில் பெங்களூர் டிராபிக்-ஐ தவிர்க்கத் தான் ஒரு உத்தியை பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.
நான் பெங்களூர்-க்கு எப்போது வந்தாலும் இரவு நேரத்தில் தான் வருவேன், பெங்ளூர்-ஐ விட்டு வெளியேறும் போது இரவு நேரத்தில் தான் செல்வேன். அதனால் பெங்களூர் டிராபிக் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டது இல்லை எனப் பேசினார். இதற்கு மொத்த அரங்கமும் அவருடன் சேர்ந்து சிரித்தனர். இந்த யுத்தியை எப்போதெல்லாம் பெங்களூர் வர வேண்டும் அப்போதெல்லாம் பயன்படுத்துவதாகவும் விளக்கினார் ஸ்ரீதர் வேம்பு.
இந்தியாவில் சுமார் 187 பெரும் பணக்காரர்கள் எனக் கூறப்படும் பில்லியனர்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் மும்பை, பெங்களூரு, டெல்லி, சென்னை போன்ற பெரிய பெருநகரங்களில் வாழ்ந்து வரும் வேளையில் ஸ்ரீதர் வேம்பு இதற்கு விதிவிலக்கு.
ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி பெங்களூருவின் போக்குவரத்தையும் டெல்லியின் மாசுபாட்டையும் வெறுப்பதாகப் பல இடத்தில் பேசிய அவர் கொரோனா காலத்தில் முதல் ஆளாகக் கிராமப்புற மேம்பாட்டிற்குக் குரல் கொடுத்தவர்.
55 வயதான ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, 2019 ஆம் ஆண்டு முதல் தனது சிஇஓ அலுவலகத்தைச் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டத்தில் உள்ள மத்தலம்பாறை என்ற கிராமத்திற்கு மாற்றிக்கொண்டு மொத்தமாகக் குடிபெயர்ந்தார். பல வருடங்களாகக் கிராமத்தில் வாழ்ந்த நிலையில் தற்போது நகரங்களில் கூடுதலான நேரம் செலவழிக்க முடியாமல் உள்ளார், இதனால் தென்காசியில் ZOHO-வின் புதிய அலுவலகம் துவங்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications