கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முறையாக வரி செலுத்தாத சொகுசு கார்கள் உரிமையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 30க்கும் அதிகமான ஆடம்பர கார்களை பறிமுதல் செய்திருப்பதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறுகின்றனர்.
பெங்களூருவில் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இங்கே அதிக சம்பளம் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதேபோல ஆடம்பர கார்களின் பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் பெங்களூரு போக்குவரத்து துறை அதிகாரிகள் முறையாக வரி செலுத்தாத 30 ஆடம்பர கார்களை கைப்பற்றி உள்ளனர் .

சாலை வரி உள்ளிட்ட வரிகளை கட்டாமல் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் இந்த கார்களை பறிமுதல் செய்திருப்பதாக பெங்களூரு போக்குவரத்து காவல் துறை தெரிவிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூரு போக்குவரத்து துறை அதிகாரிகள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு நடத்தி Ferrari, Porsche, BMW, Audi, Aston Martin மற்றும் Range Rover உள்ளிட்ட 30 சொகுசு கார்களை கைப்பற்றியுள்ளனர்.
போக்குவரத்து துறை துணை ஆணையர் மல்லிகார்ஜுன் தலைமையிலான 41 பேர் கொண்ட குழுவினர் ஆர்டிஓ அதிகாரிகளோடு இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறையாக மாநில வரி மற்றும் சாலை வரி உள்ளிட்டவை செலுத்தாமல் நகரில் பயன்பாட்டில் இருக்கும் கார்களை அடையாளம் கண்ட அவர்கள் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்தனர். இந்த கார்களின் உரிமையாளர்கள் அரசுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை வரி செலுத்தாமல் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த வரியை செலுத்தி விட்டு கார்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியிருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல ஹைதராபாத் நகரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு செய்ததாக 11 ஆடம்பர கார்களை பறிமுதல் செய்தனர். அப்போது கார் உரிமையாளர்களிடம் இருந்து சுமார் எட்டு கோடி ரூபாய் வரை நிலுவையில் இருந்த வரி வசூல் செய்யப்பட்டது.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின் படி பார்க்கும்போது இந்தியாவிலேயே அதிக அளவு சாலை வரி விதிக்கப்படும் மாநிலமாக கர்நாடகா இருப்பதாக சொல்லப்படுகிறது. கர்நாடகா மாநில அரசு வாகனத்தின் வயது, அதன் விலை, அதில் பயன்படுத்தப்படும் எரிபொருள், மற்றும் எஞ்சின் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரியை நிர்ணயம் செய்கிறது. எனவே காரின் கட்டணத்தில் 13 சதவீதத்தில் இருந்து சுமார் 90 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications