பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே உலுக்கிய குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்பு, மிகப்பெரிய பாதுகாப்பு கட்டமைப்புகள் உடன் இந்த உணவகம் இயங்கி வருகிறது. வழக்கம் போல் மக்கள் கூட்டம் அலைமோதத் துவங்கியுள்ளது.
பெங்களூரில் மட்டுமே இயங்கி வந்த தென்னிந்திய உணவகமான ராமேஸ்வரம் கஃபே தற்போது பிற நகரங்களுக்கும் படையெடுக்க துவங்கியுள்ளது. இதேவேலையில் பல முக்கியமான இடத்தில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான கடைகள் வைத்து இயக்குவது கடினம் என்பதால், மக்கள் மத்தியில் பெரும் மதிப்பையும், மரியாதையும் பெற்ற ராமேஸ்வரம் கஃபே கடை, தற்போது அதிநவீன சமையலறை வசதிகள் கொண்ட உணவு ட்ரக்கை அறிமுகப்படுத்தியது மூலம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ நாடுகளில் புட் டிரக் என்பது வெற்றிபெற்ற வர்த்தக மாடலாகும். இந்தியாவிலும் தற்போது பல பெரு நகரங்களில் புட் டர்க் பிஸ்னஸ் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது, பல இளைஞர்கள் சொந்தமாகக் கடையைத் திறக்கும் முன்பு புட் டிர்க் முறையை ட்ரை செய்து வருகின்றனர்.
மக்களும் இந்த புட் டிரக் முறையை ரசிப்பது மட்டும் அல்லாமல் ஏற்றுக்கொள்ளவும் துவங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக ராமேஸ்வரம் கஃபே போன்ற பெரிய மற்றும் பிரபலமான பிராண்ட் இப்பிரிவில் இறங்கியுள்ளது புதிய மாற்றத்தை சந்தையில் ஏற்படுத்தும், பிற பிரபலமான பிராண்டும் களத்தில் இறங்கும்.
ராமேஸ்வரம் கஃபே-வின் புட் ட்ரக் அதிநவீன சமையலறை வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம், ஒரே நேரத்தில் 120 இட்லிகளைத் தயாரிக்க முடியும். மேலும், இது நிறுவன நிகழ்வுகள் அல்லது தனிப்பட்ட விழாக்களுக்கு ஏற்ப கஸ்டமைஸ் கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“ராமேஸ்வரம் ஆன் வீல்ஸ்! என்ற வாசகத்துடன் டிவிட்டரில் ராமேஸ்வரம் கஃபே-வின் புதிய புட் ட்ரக் டிரெண்டாகி வருகிறது.
ராமேஸ்வரம் கஃபே பற்றி தெரியாதவர்களுக்கு, பெங்களூருவில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே, மாதம் ரூ.4.5 கோடி வருவாய் ஈட்டும் ஒரு உணவகம், ஆண்டு வருவாய் ரூ.50 கோடியை தாண்டுகிறது என்று கூறப்படுகிறது.
இந்த உணவகம் துவங்கப்பட்டு சில ஆண்டுகளாக ஆன நிலையில், இதன் மாஸ்ஸான வளர்ச்சி மக்களை கவர்ந்துள்ளது. ஒரு காலக்கட்டத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிவிட்டர் என எதை திறந்தாலும்ராமேஸ்வரம் கஃபே பற்றி வீடியோ, போட்டோ, பதிவுகள் தான் இருக்கும். அந்த அளவுக்கு பிரபலமானது. தற்போது ராமேஸ்வரம் கஃபே பெங்களூரைத் தாண்டி பிற நகரங்களுக்கும் செல்ல துவங்கியுள்ளது.
இந்த உணவகத்தை நிறுவிய திவ்யா மற்றும் ராகவேந்திர ராவ் ஆகியோர், 2021 ஆம் ஆண்டு, ஒரு நண்பர் மூலம் அறிமுகமாகி, இந்திரா நகரில் தங்கள் முதல் கிளையைத் தொடங்கினர். இவர்கள் தங்கள் சுவையான உணவுகளாலும், 200 க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications