பெங்களூர் டிராபிக் குறைக்கும் சுரங்கப்பாதை திட்டம்.. டோல் கட்டணத்தை கேட்டு ஷாக்கான மக்கள்..!

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் சாலை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஹெப்பல் முதல் சில்க் ரோடு ஜங்ஷன் வரை சுரங்கப்பாதை அமைக்கப்படும் என பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 16.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரட்டை குழாய் வடிவம் கொண்ட சுரங்க பாதை அமைக்க 19000 கோடி ரூபாய் ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இந்த திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அதன் விவரம் வெளியாகியுள்ளது.

பெங்களூர் டிராபிக் குறைக்கும் சுரங்கப்பாதை திட்டம்.. டோல் கட்டணத்தை கேட்டு ஷாக்கான மக்கள்..!


இந்த சுரங்க பாதை அமைக்கப்பட்டால் ஹெப்பல் முதல் சில்க் போர்டு வரையிலான பயண நேரம் 90 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்களாக குறைந்து விடும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விரிவான திட்ட ஆய்வறிக்கையில் பல்வேறு முக்கியமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி இந்த சுரங்கப் பாதையை பயன்படுத்தும் கார்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த 16.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாதையை பயன்படுத்த கார்கள் 330 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும் என அந்த விரிவான திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெப்பல் முதல் சர்ஜாபூர் வரை 320 ரூபாய், ஹெப்பல் முதல் ஓசூர் மெயின் ரோடு வரை 250 ரூபாய், ஹெப்பல் முதல் சேஷாத்ரி ரோடு வரை 180 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும் என அந்த திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த டோல் கட்டணம் ஆண்டுக்கு 5 - 40% வரை உயர்த்தப்படும் எனவும் இது மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் விதிமுறைகளின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளில் இந்த கட்டுமான பணிகள் முடிவு பெறும் என்றும் 25 ஆண்டுகளுக்கு இதனை பராமரிக்கும் பணியை ஒப்பந்தம் பெற்ற நிறுவனமே மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் மாநில அரசிடம் இருந்து 19000 கோடி ரூபாயை கடனாக வாங்க திட்டமிட்டுள்ளது.

முன்னதாக இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை டெல்லியை சேர்ந்த ராடிக் கன்சல்டன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்து. ஆனால் அந்த நிறுவனம் ஆனால் மூன்று மாதங்களிலேயே இந்த ஆய்வறிக்கையை முடித்துக் கொடுத்து.

அந்த நிறுவனம் பெங்களூரு மாநகர போக்குவரத்து தரவுகளை பயன்படுத்தாமல் மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து தரவுகளை பயன்படுத்தி இந்த விரிவான திட்ட அறிக்கை தயாரித்தது தெரியவந்தது. இதனை எடுத்து பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் அந்த நிறுவனத்திற்கு 9 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+