பெங்களூரு: இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் அடுத்த 16 ஆண்டுகளில் 100 மில்லியன் டாலருக்கும் (சுமார் 830 கோடி ரூபாய்) அதிகமான சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் எண்ணிக்கை 150 மடங்கு அதிகரிக்கும் என ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. Henley & Partners சார்பாக Centi-Millionaire Report 2024 என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் பெங்களூரு நகரத்தில் மிகப்பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 150 சதவிகிதம் வரை உயரும் எனக் கூறியுள்ளது.
தற்போது பெங்களூருவில் சுமார் 13,200 கோடீஸ்வரர்கள் வசிக்கிறார்கள். இவர்களின் மொத்த செல்வம் 800 கோடி ரூபாய் ஆகும். இந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் பெங்களூருவில் கோடீஸ்வரர் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் இது 150 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஆய்வறிக்கை கூறுகிறது.

முன்னதாக உலகிலேயே செல்வ வளம் மிக்க நகரம் 2024 என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் பெங்களூருவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என குறிப்பிட்டு இருந்தது. குறிப்பாக பெங்களூருவில் கடந்த 10 ஆண்டு காலத்தில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 120% உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்த நிலையில் தான் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட சென்டி மில்லியனர் எனப்படும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அடுத்த 16 ஆண்டுகளில் பெங்களூருவில் நாம் எதிர்பாராத அளவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பார்க்கும்போது கடந்த 10 ஆண்டுகளில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவில் தான் இப்படி பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக சீனாவில் 108 சதவீதமும் அமெரிக்காவில் 81 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் ஐரோப்பாவை பொருத்தவரை அங்கே 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 26 சதவீதம் தான் உயர்ந்துள்ளது.
தற்போதைய சூழலில் கடன் மற்றும் பிற நிதி பொறுப்புகள் இல்லாமல் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் எண்ணிக்கை உலக அளவில் 29,350 ஆக இருக்கிறது. இவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் தொழில் முனைவோர்கள் ஆவர். இவ்வாறு பெரும் பணக்காரர்கள் அதிகமாக வசிக்கும் நகரமாக நியூயார்க் இருக்கிறது.
நியூயார்க் நகரத்தில் மட்டும் 74 சென்டி மில்லினியர்கள் வசிக்கின்றனர். அடுத்ததாக லாஸ் ஏஞ்சல்ஸில் 496 சென்டி மில்லினியர்கள் வசிக்கின்றனர். ஆசியாவை பொருத்தவரை பெய்ஜிங், சிங்கப்பூர், ஷாங்காய், ஹாங்காங் ஆகிய நகரங்கள் அதிக அளவிலான பெரும் பணக்காரங்கள் வசிக்கும் நகரமாக இருந்து வருகிறது. இந்த பட்டியலில் இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களும் இடம் பிடித்துள்ளன.
Written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications