பெங்களூரில் மறுபடியும் தண்ணீர் பிரச்சினை காத்திருக்கு..! ஐடி ஊழியர்களே உஷாரா இருங்க..!

பெங்களூரு நகரில் நிலத்தடி நீரை பயன்படுத்தும் அளவு அதிகரித்து வருவதால் பின்னாட்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். பெங்களூரின் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் 2024 ஆம் ஆண்டில் 100% நிலத்தடி நீர் உறிஞ்செடுக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய நிலத்தடி நீர்வளத்துறை வாரியமும் கர்நாடக மாநில நிலத்தடி நீர்வளத்துறை வாரியமும் வெளியிட்டுள்ள தரவுகளில் இது தெரியவந்துள்ளது. மத்திய அரசின் நிலத்தடி நீர்வளத் துறை வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி நம்மிடம் இருக்கும் நிலத்தடி நீரில் 70% வரை பயன்படுத்துவது பாதுகாப்பானது என்ற பிரிவிலும் 100% வரை பயன்படுத்துவது மோசமானது என்ற பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் பெங்களூரு நகரம் தற்போது மோசமான பிரிவில் இருக்கிறது.

பெங்களூரில் மறுபடியும் தண்ணீர் பிரச்சினை காத்திருக்கு..! ஐடி ஊழியர்களே உஷாரா இருங்க..!

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் பெங்களூரு நகர்புறத்தில் 100% நிலத்தடி நீர் உறிஞ்செடுக்கப்பட்டு இருப்பதாக மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பெங்களூரு நகரம் நிலத்திற்கு திரும்ப வழங்கக்கூடிய தண்ணீரை விட இரண்டு மடங்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சி இருக்கிறது என மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13 ஆண்டுகளாக பெங்களூருவில் இதே நிலைமைதான் நீடிக்கிறது என்றும் அரசு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பது, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அது பெரிய அளவில் பலன் அளிப்பதாக தெரியவில்லை எனக் கூறுகின்றனர்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை பொருத்தவரை அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விட பொதுமக்களின் பங்களிப்பு தான் மிகவும் முக்கியம். என அதிகாரிகள் கூறுகின்றனர். மக்கள் பெங்களூரு நகரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர். பெங்களூர் நகரத்தில் தற்போது குறிப்பிட்ட பரப்பளவிலான வீடுகளில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மத வழிபாட்டுத்தளங்கள் என நகரம் முழுவதும் சுமார் 3,000 இடங்களில் அரசு சார்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கர்நாடக அரசு வெளியிடும் தகவலின் படி பார்க்கும்போது கர்நாடக மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் உறிஞ்செடுக்கப்படும் விகிதம் 66.3 சதவீதத்திலிருந்து 68.4 சதவீதம் என உயர்ந்துள்ளது. அதாவது 2023 ஆம் ஆண்டில் 11.3 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் உறிஞ்செடுக்கப்பட்ட நிலையில் அது 2024 ஆம் ஆண்டில் 11.6 மில்லியன் கியூபிக் மீட்டர்கள் என உயர்ந்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சனை வராமல் தடுப்பதற்கு மக்கள் இப்போது இருந்தே நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடுகின்றனர். கடந்த ஆண்டு பெங்களூரு நகரில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுபாட்டையும் இவர்கள் முன்னுதாரணமாக கூறுகின்றனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+