நெற்றியில் ஐபோனை கட்டி ரூ.12 லட்சம் சம்பளம் பெறும் தள்ளுவண்டிக்காரர்! காய்கறி கடையிலும் AI! அடடே!

ஐடி வேலைக்குச் சென்றால் தான் லட்சக்கணக்கில் சம்பளம் பெற முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது தங்கள் அறிவை பயன்படுத்தி மக்கள் எளிதில் பணம் பார்த்து வருகின்றனர். சமீபத்திய பதிவு ஒன்றில், வீட்டில் வேலை செய்யும் பெண் ரூ.50,000-த்திற்கு மேல் வருமானம் பெறுவதாக பார்த்தோம். அதேபோல தான் காய்கறி விற்கும் நபர் ஒருவர் வருடத்திற்கு ரூ.12 லட்சம் வருமானம் ஈட்டி வேலையில்லா பட்டதாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பெங்களூரில் அவ்வப்போது சில விசித்திர சம்பவங்கள் நடக்கும். அப்படித்தான் ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையவாசிகளின் ஹாட் டாபிக். வைபவ் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில் பெங்களூரு சந்தை தெள்ளத்தெளிவாக காண்பிக்கப்படுகிறது. ஒரு நபர் அமர்ந்து கொண்டு காய்கறி விற்பனை செய்து கொண்டிருக்கிறார். அவருடைய தலையில் ஒரு கருவியை மாட்டி அதில் ஒரு ஐபோன் பொருத்தப்பட்டுள்ளது. கேமரா வெளியில் தெரியும்படி வைத்திருக்கிறார்.

இதை வெளியில் இருந்த பார்த்த வைபவிற்க்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே ஆச்சரியத்தில் அந்த காய்கறி விற்பனையாளரிடம் என்ன நடக்கிறது? என்று கேட்டிருக்கிறார். அப்போது அவர் சொன்ன பதில் தான் ஹைலைட். காய்கறி விற்கும் நபர் தான் பொழுதுபோக்கிற்காக வீடியோ எடுக்கவில்லை, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்திற்கு ட்ரெய்னிங் வழங்குவதற்காக நிஜ உலக காட்சிகளை டேட்டாவாக சேகரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நெற்றியில் ஐபோனை கட்டி ரூ.12 லட்சம் சம்பளம் பெறும் தள்ளுவண்டிக்காரர்! காய்கறி கடையிலும் AI! அடடே!

பொதுவாக AI தொழில்நுட்பத்தை மேம்படுத்த ரியல் வேர்ல்ட் டேட்டா தேவைப்படும். இந்த டேட்டாவை எடுத்து நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறார் அந்த காய்கறி விற்பனையாளர். மேலும் இந்த வேலைக்காக அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 350 சம்பளமாக வழங்கப்படுகிறதாம். காய்கறி விற்பனையாளர் தொடர்ந்து 10 மணி நேரம் ரியல் வேர்ல்ட் டேட்டாவை சேகரித்து AI தளங்களுக்கு உதவி வருகிறார்.

அப்படியானால் மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் அசால்டாக சம்பாதித்து வருகிறார். அவருடைய பதிலை கேட்ட வைபவுக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே காய்கறி விற்பனையாளர் சொன்ன பதிலையும், அவர் எடுத்த வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

வீடியோவில் ஒரு ஹிந்தி வாசகமும் எழுதி இருந்தது. "பெங்களூர் போயி ஒரு தள்ளுவண்டி பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு நெனச்சேன். ஆனா அதுலயும் போட்டி இருக்கும் போலையே", என்று எழுதி பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ போஸ்ட் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே பலராலும் பகிரப்பட்டது.

வீடியோ பகிரப்பட்டத்தில் இருந்து எக்கசக்க கமெண்ட்ஸ் வர தொடங்கியது. அதில் ஒரு பயனர் தொழில்நுட்ப வளர்ச்சி காய்கறி விற்பயணையாளர்களுக்கும் எவ்வளவு பெரிய வருமானத்தை ஈட்டி தருகிறது பார்த்தீர்களா? என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு பயனரோ நீங்கள் கொடுக்கும் டேட்டாவை வைத்து நாளை உங்களையே மாற்றி விட்டு ரோபோக்களை காய்கறி விற்கச் சொல்வதற்கும் வாய்ப்புண்டு என்று சொல்லாமல் சொல்லியிருந்தார். ஏற்கனவே ஏர்போர்ட் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மனிதர்களுக்கு பதிலாக AI வேலை செய்து கொண்டிருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு புறம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், இனி வரும் காலங்களில் அவை வேலைவாய்ப்புகளை எப்படி மாற்றப் போகிறது? மனிதர்களை முழுவதுமாக பணியிலிருந்து நீக்கிவிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+