குருகிராம்: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களூர் நகரம் அண்மைக்காலமாக தண்ணீர் தட்டுப்பாடு, கடுமையான போக்குவரத்து நெரிசல் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில் பெங்களூருக்கு மாற்றாக ஒரு ஸ்டார்ட் அப் நகரம் எதுவாக இருக்கும் என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
லிட்டில் ஸாஸ் (Little saas) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான உதித் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் நீங்கள் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவி வருகிறீர்கள் என்றால் பெங்களூரு அல்ல குருகிராம் தான் உங்களுக்கு சரியான இடமாக இருக்கும் என கூறி இருந்தார்.

அவரது இந்த பதிவு தான் எக்ஸ் தளத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. உதித் கோயங்கா, உரிய சம்பளத்திற்கு திறமையான நபர்கள் குருகிராமில் கிடைக்கிறார்கள், சரியான வாடகைக்கு அலுவலகங்கள் கிடைக்கின்றன, ஒரு வாரத்துக்கு முன்புதான் நான் குருகிராமுக்கு இடம் பெயர்ந்தேன், இங்கே ஒரு சிறிய தலைமை அலுவலகத்தை நிறுவி விட்டேன் , 32 லட்சம் ரூபாய்க்கு இரண்டு ஒப்பந்தங்களை முடித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
உதித் கோயங்காவின் இந்த பதிவு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் குளிர்காலங்களில் வேலை செய்வதற்கு உகந்த இடமாக குருகிராம் இருக்காது என தெரிவித்துள்ளனர். பெங்களூருவை ஒப்பிடும்போது குருகிராமில் அலுவலகங்களுக்கான வாடகை என்பது அதிகமாக இருக்கிறது என்றும் பெங்களூருவைப் பொறுத்தவரை அங்கே நிறைய கிரியேட்டிவிட்டியும் ஸ்டார் டப்புகளுக்கு உகந்த ஒரு கலாச்சாரமும் நம்மால் காண முடியும் என்றும் ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்ட் அப் நகரம் என்றால் அது பெங்களூராக மட்டுமே இருக்க முடியும் , இரண்டாவது இடத்தை வேண்டுமானால் குருகிராமிற்கு வழங்கலாம் என ஒரு பயனர் கூறியுள்ளார். ஸ்டார்ட் அப் தொடங்க குருகிராம் சிறந்த இடமாக இருக்கலாம், ஆனால் குருகிராமில் உங்களது உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு அதிகமாக செலவிட வேண்டி இருக்கும் மும்பையிலும் இதே நிலைமைதான் என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.
பெங்களூருவில் மட்டும்தான் ஸ்டார்ட் அப்களுக்கான நெட்வொர்க்கிங் கிடைக்கும் என பலர் பெங்களூருவுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்துள்ளனர். இதனிடையே அன்அகாடமி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌரவ் மஞ்சல் மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களை நாம் வார இறுதி நாட்களில் பொழுதுபோக்குக்கான இடங்களாக வைத்துக் கொள்ளலாமே தவிர ஸ்டார்ட் அப்களுக்கான இடமாக பார்க்க முடியாது. ஸ்டார்ட் அப்களுக்கு உகந்த இடம் பெங்களூரு மட்டுமே , அங்கு தான் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications