பெங்களூரு கிழக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள பல பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) முழு நாளும் தண்ணீர் சப்ளை நிறுத்தப்படும் நிலை ஏற்பட உள்ளது.
காவேரி V ஸ்டேஜ் திட்டத்துக்காக புதிய EMF மீட்டர்கள் அமைக்கும் பணி நடைபெறுவதால், தண்ணீர் பம்புகள் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை இயக்கப்படாது. இதனால் பல முக்கிய பகுதிகள் 24 மணி நேரம் தண்ணீர் இல்லாமல் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த பம்புகள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் தொடங்கினாலும், தண்ணீர் வீடுகளுக்கு சென்று, சீராக 3 முதல் 6 மணி நேரம் ஆகும் என்று BWSSB தெரிவித்துள்ளது. இதனால் வியழக்கிழமை பெங்களூரின் பல முக்கிய பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்க உள்ளது.
பெங்களூரில் கோடை வெப்பம் இப்போதே தெரிய துவங்கியிருக்கும் வேளையில், மார்ச் மாதத்தின் துவக்கத்திலேயே வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
கிழக்கு பெங்களூரில் மஹாதேவபுரா மண்டலம் மற்றும் சுற்றுப்புறங்கள் அதிகமாக பாதிக்கப்படும் இதில். வைட்ஃபீல்ட், கடுகோடி, ஹூடி, கருடசார்பல்யா, தொட்டநெக்குன்டி, முன்னேகொலாலா (மரத்தஹள்ளி), நல்லுஹள்ளி, சித்தாபுரா, நாகொண்டநஹள்ளி, ராமகொண்டநஹள்ளி, சண்ணசந்திரா ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.
தெற்கு பெங்களூரில் பனஷங்கரி, குமாரசாமி லேஅவுட், பூர்ணப்ரஜ்ஞா லேஅவுட், அஞ்சனாபுரா, கோட்டிகேரே, பேகூர், கல்லஹள்ளி, குட்லு, கொடிச்சிக்கனஹள்ளி ஆகிய பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் இருக்கும்.
இந்த தண்ணீர் பிரச்சனை காரணமாக மக்கள் கார் கழுவுதல், துணி துவைப்பது போன்ற தண்ணீர் அதிகம் செலவாகும் வேலைகளை வார இறுதிக்கு தள்ளி வைக்கலாம். ஆட்டோமேட்டிக் பம்ப் இருந்தால் மேனுவலுக்கு மாற்றி வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பம்புகள் தொடங்கினாலும், தண்ணீர் வீடுகளுக்கு சென்று அழுத்தம் சீராக 3 முதல் 6 மணி நேரம் ஆகும். எனவே வெள்ளிக்கிழமை காலைக்கு தயாராக இருக்க வேண்டும்.
இந்த தண்ணீர் நிறுத்தம் தற்காலிகமானது என்றாலும், பெங்களூரு மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். BWSSB திட்டத்தின் மூலம் நீண்டகாலத்தில் தண்ணீர் விநியோகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications