இந்தியாவின் ஐடி நகரம் என அழைக்கப்படும் பெங்களூரில் இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐடி நிறுவனங்களுக்கும், நாட்டையே திரும்பி பார்க்க வைத்த பல புகழ்பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தாயகமாகவும் இருக்கிறது.
இப்படி ஐடி மற்றும் டிஜிட்டல் சேவை வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் பெங்களூர் நகரம் எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சனையால் நாட்டு மக்களின் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது. பெங்களூரில் சுமார் 8 முக்கிய பகுதிகள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் திணறி வருகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில் பெங்களூர் நிறுவனங்கள் ஊழியர்கள் தரப்பில் இருந்து வரும் கோரிக்கை காரணமாக தற்போது அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறது.
குக்கு FM இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி லால் சந்த் பிசு கூறுகையில் "தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர மறுப்பதால், நிறுவனங்கள் மீண்டும் ரிமோட் வொர்கிங் முறைக்கு மாறுகின்றன. இதனால், திடீர் மாற்றத்திற்கு ஏற்ப செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டியிருப்பதால் நிறுவனங்களின் இயக்கம் பாதிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இதேபோல் மேட்ரிமோனி.காம் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி முருகவேல் ஜானகிராமன் கூறுகையில் கட்டாய நீர் சேகரிப்பை முறையை ஒவ்வொரு கட்டிடங்களும் நிறுவ வேண்டுமென முன்மொழிந்தார். மேலும், நீர் பயன்பாட்டைக் குறைத்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு அரசு உதவி தேவை என்றும் வலியுறுத்தினார்.
பெங்களூரில் கடந்த 6 மாதங்களாகப் பெரிய மழை பெய்யாததும், கோடை கால தாக்கம் அகியவற்றைலும் இந்த மோசமான நிலை உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. வொர்க் ப்ரம் ஹோம் தாண்டி தற்போது நிறுவனங்கள் ரிமோட் வொர்க்கிங் அதாவது சொந்த ஊரில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கி வருகிறது.
பெங்களூர் நகரின் வேகமான நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாகத் தண்ணீர் பற்றாக்குறை நிலைமை மோசமடைந்து வருகிறது. "இந்தியாவின் சிலிக்கான் வேலி" என்று அழைக்கப்படும் பெங்களூருவுக்கு இது ஒரு பெரும் சவாலாக உள்ளது. கட்டாய நீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல் போன்ற உடனடி மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் அவசியம் என தொழில் துறை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த தண்ணீர் பிரச்சனை ஐடி அலுவலகங்கள் மற்றும் டெக் பார்க் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இதனால் வேலைவாய்ப்பு சந்தை முதல் ரியல் எஸ்டேட் சந்தை வரையில் அதிகப்படியான பாதிப்புகள் அடுத்தடுத்து உருவாகி வருகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications