பெங்களூரு: பெங்களூரு மாநகரை கடுமையான தண்ணீர் பிரச்னை ஆட்கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு எளிதான ஒரு வழிமுறை இருக்கிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரு நகரம் தண்ணீரில் தன்னிறைவு கொண்ட நகரமாக மாறுவதற்கான ஒரு வழிமுறையை கண்டறிந்தது. பெங்களூருவில் சராசரியாக வீட்டு தேவைகளுக்காக ஒரு ஆண்டுக்கு 20.05 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 16.04 டிஎம்சி அதாவது 80 சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட நீரில் இருந்து பெற முடியும் என இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவித்தது.

கழிவு நீரை சுத்திகரித்து அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. கூடுதலாக மழை மூலம் 14.80 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்பதால் பெங்களூருக்கு நகரம் தண்ணீரில் தன்னிறைவு அடைந்த நகரமாக மாறலாம் என 2016 ஆம் ஆண்டிலேயே கூறப்பட்டது. ஆனால் பெரும்பாலான மக்கள் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துவதற்கு தயக்கம் தெரிவிப்பதால் இது நடைமுறைக்கு வராமல் போய்விட்டது.
நீண்ட கால முயற்சிக்கு பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டில் பெங்களூருவின் ஹோசா ரோடு பகுதியில் உள்ள இம்மானுவேல் ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் சுத்திகரித்து வெளிவரக்கூடிய தண்ணீரை மக்கள் தொட கூட மறுக்கின்றனர் என்கிறார் அங்கே வசிக்கக்கூடிய மென்பொருள் பொறியாளர் கோபிதாஸ். செடிகளுக்கு ஊற்றுவது கூட மக்கள் இந்த தண்ணீரை பயன்படுத்த தயங்குகின்றனர் என அவர் தெரிவிக்கிறார்.
பெங்களூருவின் பயோமி என்விரான்மென்டல் சொலுஷன் (Biome environmental solutions) நிறுவனத்தின் இயக்குனரான விஸ்வநாதன் மக்கள் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம், இதனால் உடல் நிலைக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது என அறிவியல் பூர்வமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்களின் மனநிலை இதனை ஏற்க மறுக்கிறது எனக் கூறுகிறார். அண்மையில் ஜெரோதா நிறுவனரான நிதின் காமத், போஷன் வைட் வாட்டர் (BOSHAN WHITE WATER) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தார். இந்த நிறுவனம் கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றி தருகிறது.
தற்போதைய சூழலில் பெங்களூரு போன்ற நகரங்களில் தண்ணீர் பிரச்சனைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரே தீர்வாக அமையும் என்கிறார் போஷன் வைட் வாட்டர் நிறுவனத்தின் தலைவர் விகாஸ் பிரம்மா. கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் தான் மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பற்றி அறிந்து வருகின்றனர் என்கிறார். பொதுமக்களின் மனநிலையில் மாற்றம் வரை இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படும் என அவர் கூறுகிறார்.
மக்கள் ஏற்கனவே மறைமுகமாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர் என்கிறார் விஸ்வநாத். கோலாரில் உள்ள லட்சுமி சஹாரா ஏரியில் இதுபோன்ற சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரானது கலக்கப்படுகிறது. இந்த தண்ணீரை மக்கள் விவசாயத்துக்காக பயன்படுத்துகின்றனர். முதலில் அந்த பகுதி விவசாயிகள் இதனை ஏற்க மறுத்ததாகவும், ஆனால் ஏரி தண்ணீர் மூலம் அந்த பகுதியில் நிலத்தடி நீர் உயரத் தொடங்கியதை அடுத்து நம்பிக்கை பெற்றனர் என்கிறார்.
இந்தப் பகுதியில் இதற்கு முன்பு 1800 அடிக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது 300 முதல் 400 அடியிலேயே நிலத்தடி நீர் கிடைப்பதாக விஸ்வநாத் தெரிவிக்கிறார். மழை பொய்த்து போகும் காலகட்டங்களில் இது போன்ற சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான் மக்களுக்கு உதவும் என்றும் மக்கள் தங்களது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications