பெங்களூரு: கடுமையான தண்ணீர் பிரச்சனையை எதிர்கொண்டுள்ள பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் கூட்டமைப்பும், பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியமும் இணைந்து ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
இந்தியாவின் ஸ்டார்ட்அப் கேப்பிட்டல் என அழைக்கப்படும் பெங்களூரில் கடந்த சில மாதங்களாக கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தொடங்கி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்புகள் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

போதிய மழையின்மை, கிணறுகள் வறண்டு போனது ஆகியவை காரணமாக பெங்களூர் மக்கள் கடுமையான தண்ணீர் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியாகும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகாமல் இருப்பதை தவிர்க்க அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கூட்டமைப்பும் பெங்களூரு குடிநீர் விநியோக வாரியமும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதன்படி பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்திய நீரில் உருவாகும் சுத்திகரிக்கப்பட்ட நீரானது விற்பனை செய்யப்பட உள்ளது.
பெங்களூருவின் அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் காவேரிபவனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இந்த ஒப்பந்தமானது கையெழுத்தானது. இதனை அடுத்து பேட்டி அளித்த குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர், இந்தியாவிலேயே தனித்துவமான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திய நகரமாக பெங்களூர் இருக்கிறது என கூறினார்.
தற்போதைய சூழலில் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உருவாகும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக கால்வாய்களில் கலப்பதை தடுக்க ஒரு புதிய ஐடியாவை செயல்படுத்தி இருப்பதாக கூறினார்.
தற்போது பெங்களூரு நகரில் ஒரு நாளைக்கு 1200 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது வருகிறது இதில் 700 மில்லியன் லிட்டர் தண்ணீரானது அடுக்குமாடி குடியிருப்புகளில் உருவாக்கப்படுகிறது. எனவே அந்த நீர் வீணாகாமல் தேவை இருப்பவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக ராம் பிரசாத் மனோகர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கும் பெங்களூரு குடிநீர் வாரியம் இரண்டு ரூபாயும் பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் கூட்டமைப்பு எட்டு ரூபாயும் பெறும் என தெரிவித்துள்ளார்.
தண்ணீர் தேவை இருப்பவர்களின் வீடு தேடி இந்த தண்ணீரானது விநியோகம் செய்யப்படும் எனக் கூறியுள்ளார். பெங்களூரு குடிநீர் வாரியத்திடம் உள்ள டேங்கர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் இந்த தண்ணீரானது சேகரிக்கப்பட்டு தேவையுள்ள இடங்களுக்கு விநியோகிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
தண்ணீர் தேவையில் இருப்பவர்களுக்கும் பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்போர் கூட்டமைப்புக்கும் இடையே ஒரு பாலமாக பெங்களூர் குடிநீர் வாரியம் செயல்படும் என அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் மூலம் காவிரி தண்ணீர் மற்றும் போர்வெல் தண்ணீரை சார்ந்திருக்க வேண்டிய அளவு குறையும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த யோசனை பெங்களூரு தண்ணீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வினை தரும் என நம்பப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications