பெங்களூர்: கர்நாடகா மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ள மசோதாவில், கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் இருக்கும் நிர்வாக பணியிடங்களில் 50 சதவீதமும் மற்றும் நிர்வாகம் அல்லாத பணியிடங்களில் 75 சதவீத ஊழியர்களைக் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் கன்னடர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்கும் மசோதாவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை அறிவித்தார். திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா X இல் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் யார் கன்னடர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விளக்கமும் தற்போது வெளியாகியுள்ளது. கர்நாடக உள்ளூர் வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் தகுதியானவர்கள் யார்..?
இந்தச் சட்டத்தின்படி, 'உள்ளூர்வாசிகள்' என்பவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்தவராகவும், 15 ஆண்டுகளாக அம்மாநிலத்தில் வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். மேலும், கன்னட மொழியைப் படிக்க, எழுத மற்றும் பேசும் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும். இதற்கான தகுதிப் தேர்வை அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நிறுவனம் நடத்தும் அதில் தேர்ச்சி அடைய வேண்டும்.
இந்தச் சட்டத்தின்படி, ஒருவர் கன்னட மொழி பாடமாக உள்ள உயர்நிலை கல்வி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனம் நடத்தும் கன்னட மொழித் திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த நிலையில் நிறுவனங்களுக்கு தகுதியான உள்ளூர்வாசிகள் கிடைக்காத பட்சத்தில், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் உள்ளூர்வாசிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதுமான உள்ளூர் மக்கள் கிடைக்காத நிலையில், தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் அரசிடம் இந்த சட்டத்திலிருந்து விலக்கு கோரலாம். அரசு அதற்குரிய விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கும்.
கன்னடர்களின் நீண்டகால கோரிக்கை:
கர்நாடகாவில் நீண்ட காலமாக கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு ஒதுக்கீடு கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜூலை மாத தொடக்கத்தில், கன்னட அமைப்புகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடத்தி, அரசு மற்றும் தனியார் துறை வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் சரோஜினி மகிஷி அறிக்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
சரோஜினி மகிஷி என்பவர் முன்னாள் மத்திய அமைச்சரும், கர்நாடகாவிலிருந்து முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 1984 ஆம் ஆண்டு சரோஜினி மகிஷி தலைமையிலான மகிஷி குழு ஒரு முக்கிய அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், கர்நாடகாவில் செயல்படும் மத்திய அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் C மற்றும் D தர பணிகளில் 100% உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உட்பட 58 பரிந்துரைகள் இருந்தன.
இந்த புதிய சட்டம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என அரசு கூறும் நிலையில், தொழிற்துறை நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும் என கருதுகின்றன. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி அல்லது தோல்வி அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications