முன்பெல்லாம் தமிழகத்தில் இருந்து இளைஞர்கள் கூட்டம் வேன் பிடித்துக் கொண்டு பெங்களூருக்குச் சென்று விடுமுறையை ஜாலியாகக் கொண்டாடுவார்கள். காரணம் பெங்களூருவில் உள்ள தரமான விலை மலிவான மது பானங்கள், பல தரப்பட்ட பீர் வகைகள், கேபரே நடன மையங்கள் என ஜாலிக்கு அளவே கிடையாது.
நள்ளிரவுக்கு மேலேயும் இந்தக் கூத்து நடக்கும். ஆனால் ஒருகட்டத்தில் இது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதால் காவல்துறையினர் சட்டதிட்டங்களை கடுமையாக்கினர். இரவு 11 மணிக்கு மேல் எந்தக் கொண்டாட்டத்துக்கும் அனுமதி இல்லை.

அத்துடன் கொரானோ தொடங்கியதும் இவை எல்லாவற்றுக்கும் ஒரு மூடுவிழா நடந்தது.
இந்த நிலையில் கர்நாடக அரசு இப்போது வணிக நிறுவனங்கள் செயல்படும் நேரத்தை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
பெங்களூரு, மங்களூரு, மைசூரு, கலபுர்கி, விஜயபுரா, பெலகாவி, ஹுப்பாளி, தார்வாட், ஷிவமொக்கா, பல்லாரி உள்பட 11 நகரங்களில் உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களின் வணிக நேரத்தை நீட்டிப்பதற்கான அறிவிப்பை மாநில பட்ஜெட்டில் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின்போது படுத்துவிட்ட வியாபாரங்கள் மீண்டும் மீட்டு எடுக்க நல்லதொரு வாய்ப்பை தரும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் இந்த அறிவிப்பு 11 நகரங்களுக்கும் பலன் தரும் என்றால் அதை நிச்சயமாக சொல்ல முடியாது.
காரணம் பெங்களூருவைத் தவிர மற்ற நகரங்களில் சுற்றுலா, ஐடி துறைகள் அந்தளவுக்கு சிறப்பாக இல்லை. பொழுதுபோக்குக்காக அங்குள்ள மக்கள் பெரிய அளவுக்கு செலவு செய்ய மாட்டார்கள். அதற்கான வாய்ப்பும் குறைவாக இருக்கிறது.
பெங்களூருக்கு அடுத்தபடியாக எடுத்துக் கொண்டால் மைசூரு சுற்றுலாவுக்கு பேர் போன நகரமாகும். எனவே இங்கு வணிக நேரங்கள் கூடுதலாக இயங்கினால் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக மதுபானக் கடைகள், உணவகங்கள் நல்ல லாபத்தைப் பார்க்கலாம்.
மங்களூரு ஒரு துறைமுக நகர். இங்கு பெரிய அளவில் சரக்குப் போக்குவரத்தோ, மக்கள் போக்குவரத்தோ இல்லை. எனவே இங்கு வணிக நிறுவனங்கள் கூடுதல் நேரம் இயங்குவதால் எந்தப் பலனும் இல்லை.
கலபுர்கி, விஜயபுரா, பெலகாவி, ஹுப்பாளி, தார்வாட், ஷிவமொக்கா, பல்லாரி போன்ற நகரங்களிலும் ஏறத்தாழ இதேநிலைதான். இங்குள்ள வணிகர்கள் அரசின் அறிவிப்பை பெரிய விஷயமாகக் கருதவில்லை. மாறாக, இரவு நேர வேலை அதிகரித்தால் கூடுதல் ஷிப்டு போட்டு பணியாற்றினால் செலவுதான் அதிகரிக்கும்.
அத்தோடு இரவு நேர பயணங்களை சமூக விரோதிகள் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் அச்சுறுத்தல் இருப்பதால் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இருக்காது. என்னதான் போலீஸார் கூடுதல் சிசிடிவி, ரோந்து போன்றவற்றின் மூலம் கண்காணித்தாலும் அது போதாது என்று கருதுகின்றனர்.
பெங்களூரு தவிர மற்ற நகரங்கள் எல்லாம் இன்னும் கிராமப் போங்கிலேயே இருக்கின்றன. கோயில் திருவிழாக்கள், யக்ஷ்க கானம் எனப்படும் பாரம்பரிய கூத்து போன்ற இரவு நிகழ்ச்சிகள் எப்போதாவது நடக்கும். அதற்கு போலீஸார் பாதுகாப்பு தருவதால் பிரச்னை இல்லை.
மற்றபடி இந்த உத்தரவு முழுக்க முழுக்க பெங்களூருவுக்குத்தான் பலனைத் தரும் என்பதே மக்களின் பெரும்பான்மை கருத்தாகும்.
பெங்களூருவில் பிரபலமான வித்யார்த்தி பவன், சென்ட்ரல் டிபன் ரூம் (CTR), மாவல்லி டிபன் ரூம் (MTR) போன்ற கிளாசிக் உணவகங்கள் இப்போது இரவு 9 மணிக்குள் மூடப்பட்டு விடுகின்றன. அரசின் புதிய அறிவிப்பினால் கூடுதலாக ஓரிரு மணி நேரம் திறந்திருக்கும்.
பெங்களூருவில் உணவகங்கள் தவிர மதுபானக் கூடங்கள், பப்கள் அதிகம். இவையும் இந்த அறிவிப்பால் பெரிய பலனைப் பெறும். இதனால் குறிப்பாக ஐடி ஊழியர்கள் ரொம்பவே குஷியாகி உள்ளனர்.
அதேவேளையில் அகால நேரங்களில் வீடுதிரும்புவோரின் பாதுகாப்பு பிரச்னை போலீஸாருக்குப் பெரும் தலைவலியைத் தருவதாகும்.
எனவே இரவு ரோந்துப் பணி, வாகனச் சோதனையை போலீஸார் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கர்நாடக அரசின் இந்த உத்தரவு தமிழ்நாட்டுக்குப் பொருந்துமா என்று சிலர் கேட்கின்றனர்.
பெங்களூரு கலாசாரத்துடன் தமிழ்நாட்டுக் கலாசாரத்தை ஒப்பிட்டால் இரண்டுக்கும் நடுவே மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளியைப் பார்க்கலாம். எனவே இது தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் பொருந்தி வராது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனாலும் ஒரு நகரின் வளர்ச்சிக்கு Night Life மிகவும் அவசியம், அதை எப்படி, எங்கு செய்கிறோம் என்பதில் தான் அனைத்துமே அடங்கியிருக்கிறது.
Story Written by: I.Jayachandran
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications