பெங்களூர் ரியல் எஸ்டேட் தலைகீழாக மாறியது.. சொந்த வீடு வாங்குவது இனி வெறும் கனவு தான் போலயே..!!

பெங்களூரு: இந்தியாவின் ஐடி நகரம், ஸ்டார்ட்அப் தலைநகரம் என பல பெருமைகளுக்கு சொந்தகாரரான பெங்களூருவில் வீடுகள் விற்பனை 4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நைட் பிரான்க் இந்தியா (Knight Frank India) என்ற நிறுவனம் பெங்களூருவில் ரியல் எஸ்டேட் நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் பெங்களூருவில் வீடு விற்பனை அதிகரித்துள்ளது என்றும் பெரும்பாலும் ஆடம்பர வீடுகள் தான் அதிகமாக விற்பனையாகியுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

 பெங்களூர் ரியல் எஸ்டேட் தலைகீழாக மாறியது.. சொந்த வீடு வாங்குவது இனி வெறும் கனவு தான் போலயே..!!

2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் பெங்களூருவில் வீடுகளின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நான்கு சதவீதம் உயர்ந்துள்ளது என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அதாவது இந்த 6 மாத காலத்தில் 27,404 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் ஜனவரி முதல் புதிதாக கட்டி விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 25,567 ஆகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 23,500 வீடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் நடப்பாண்டில் 9% அதிகரித்துள்ளது.

 பெங்களூர் ரியல் எஸ்டேட் தலைகீழாக மாறியது.. சொந்த வீடு வாங்குவது இனி வெறும் கனவு தான் போலயே..!!

பெங்களூரில் விற்பனையான பெரும்பாலான வீடுகள் பிரீமியம் பிரிவை சேர்ந்ததாக உள்ளது. குறிப்பாக 1 கோடி மற்றும் அதற்கும் அதிகமான விலை கொண்ட வீடுகள் தான் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து முதல் ஆறு மாத காலத்தில் பெங்களூருவில் விற்பனையான வீடுகளில் 13,698 வீடுகள் 1 கோடி மற்றும் அதற்கும் மேல் விலை கொண்டவை . மொத்த விற்பனையில் இது கிட்டத்தட்ட 50 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 76% உயர்ந்துள்ளது.

50 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வீடுகளின் விற்பனை என்பது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 63 சதவீதம் குறைந்துள்ளது. மொத்தம் 1,928 வீடுகள் தான் நடப்பு ஆண்டில் முதல் ஆறு மாத காலத்தில் விற்பனையாகியுள்ளன. அதே வேளையில் 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட 11,780 வீடுகள் விற்பனையாகியுள்ளன.

சொத்து ஆலோசனை நிறுவனமான ஏனராக், பெங்களூருவில் 2023ஆம் ஆண்டில் முதல் ஆறு மாத காலத்தை விட நடப்பாண்டில் குடியிருப்புகளின் விலை சராசரியாக 32 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பெங்களூருவில் குடியிருப்புகளின் விலை 57% உயர்ந்துள்ளதாம். அதாவது 2019 ஆம் ஆண்டில் 4960 ரூபாயாக இருந்த ஒரு சதுர அடி விலை தற்போது 7,800 என உயர்ந்துள்ளது. வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு காரணம் என தெரிவித்துள்ளது. தற்போது பெங்களூரிலேயே வடக்கு பெங்களூரு பகுதியில் தான் அதிகபட்சமாக ஒரு சதுர அடி 7000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறதாம்.

story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+