பெங்களூரைச் சேர்ந்த 57 வயதான பெண்மணி ஒருவர் தனது மகனின் திருமணத்திற்காக வாங்கிய விலை உயர்ந்த பனாரஸ் சில்க் சாரியை ட்ரை கிளீனிங் செய்ய கொடுத்துள்ளார். அதன் பிறகு ட்ரை கிளீனர்களிடமிருந்து புடவையைப் பெற்றார். அதை பிரித்துப் பார்த்தபோதுதான் அவருக்கு அதிர்ச்சி ஆனது. ஏனெனில் தான் கொடுத்த புடவை கிழிந்த நிலையில் திரும்பிக் கொடுக்கப்பட்டது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த புடவையின் மதிப்பு 33,000 ரூபாய்.
புடவைகள் என்றாலே பெண்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை சொல்லி மாளாது. யெலச்சேனஹள்ளியில் வசிக்கும் அனுபிரபா பட் என்ற பெண்மணி ஜெய நகரில் உள்ள பேண்ட் பாக்ஸ் கடையில் சலவை செய்வதற்காக தனது 3 பட்டு புடவைகளை கொடுத்துள்ளார். அதில் தனது மகனின் திருமணத்திற்காக டெல்லியில் இருந்து வாங்கிய 33,000 ரூபாய் மதிப்புள்ள புதிய பனாரஸ் புடவையும் அடங்கும்.

இவருடைய புடவைக்கு நிறுவனம் 1,770 ரூபாய்க்கான பில்ளை வழங்கியுள்ளது. அனுபிரபா டிசம்பர் 12-ஆம் தேதி அன்று பில்லை செலுத்தி புடவையை பெற்றார். அப்படி புடவையை வாங்கி பார்த்த அனுபிரபாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய புடவை கிழிந்த நிலையில் திருப்பித் தரப்பட்டது.
பேண்ட் பாக்ஸ் நிறுவனத்திடமிருந்து புடவையின் விலையை திருப்பிக் கேட்டபோது அங்கு பணிபுரியும் ஊழியர்களில் ஒருவர் ஜனவரி 2023-க்குள் பணத்தை திருப்பித் தருவதாக உறுதியளித்தார். இருப்பினும் கடைக்கு பலமுறை சென்றும், எண்ணற்ற மெயில் மற்றும் தொலைபேசி அழைப்புகளை விடுத்தும் நிறுவனத்தின் தரப்பில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. எனவே டிசம்பர் 6, 2023 அன்று பேண்ட் பாக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக அனுபிரபா சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பினார். அப்போதும் நிறுவனத்தின் தரப்பில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
வேறு வழியின்றி டிசம்பர் 26, 2023 அன்று அனுபிரபா மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகினார். நிறுவனத்தில் பயிற்சி பெறாத தொழிலாளர்கள் இருப்பதாகவும் இதன் விளைவாக தனது காஸ்ட்லி புடவை சேதமடைந்ததாகவும் புகார் அளித்தார். ஆனால் பேங்க் பிரதிநிதி ஒருவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார். அதோடு அனைத்து செயல்முறையும் மெஷின்களின் மூலம் செய்யப்பட்டதாகவும், இங்கு பயிற்சி பெறாத தொழிலாளர்கள் இடம்பெறவில்லை என்றும் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டது.
அதேபோல புடவை புதியதல்ல தரம் குறைந்ததாக இருந்ததனால் கிழிந்து விட்டதாகவும் நிறுவனம் கூறியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த கமிஷன் புடவை சேதமடைந்த நிலையில் இருப்பதை கண்டறிந்தது. புடவையை ஆய்வு செய்து சரிபார்த்த பிறகு அந்த ஆடை விலை உயர்ந்தது என்பது தெளிவாக தெரிய வந்தது.
இதனால் ஆடைக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் சேவையில் குறைபாடு இருப்பதை கண்டறிந்து நீதிமன்றம் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. அதேபோல புடவை வாங்கிய ரசீதை அனுபுரபா சமர்ப்பிக்கவில்லை. எனவே 6 சதவீத ஆண்டு வட்டியுடன் ஆடைக்கான வேலையாக ரூ.25,000-ஐ செலுத்த பேண்ட் பாக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதோடு ஒரு வருடத்திற்கு மேலாக பிரச்சனையை தீர்ப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அனுபிரபாவுக்கு ரூ.15,000 மற்றும் வழக்குச் செலவாக ரூ.5000 செலுத்துமாறு உத்தரவிட்டது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications