சமூக ஊடகங்களின் அசுர வளர்ச்சி, நட்பையும் புதிய உறவுகளையும் எளிதாக்கியுள்ளது. அதே சமயம், இந்த டிஜிட்டல் தளங்களை ஒரு கவசமாகப் பயன்படுத்திக் கொண்டு குற்றவாளிகள் அரங்கேற்றும் மோசடிகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, திருமண ஆசை வார்த்தைகளைக் கூறி, அப்பாவிகளின் உணர்வுகளை மூலதனமாக்கி, பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் சுரண்டும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், பெங்களூருவில் ஒரு வங்கி ஊழியர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரால், அவர் யார் என்பதை அறியாமல் ஏமாற்றப்பட்டு, பெரும் தொகையை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரித்தேஷ் என்கிற தனுஷ் என்று அடையாளம் காணப்பட்ட அந்த மோசடி நபர், முதலில் இன்ஸ்டாகிராம் மூலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வங்கி ஊழியரிடம் மெசேஜ் மூலமாக பேசி வந்துள்ளார். நாளடைவில் இவர்களின் உரையாடல்கள் உண்மையான நட்பு போல் வளர்ந்தது. இதையடுத்து, இருவரும் தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டதுடன், தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் பேசத் தொடங்கினர். இதுவே, மோசடி திட்டத்தை அரங்கேற்ற ரித்தேஷுக்கு சரியான வாய்ப்பாக அமைந்தது.

முதலில், ரித்தேஷ் தனது மகன் மிக கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும், அவசரமாகப் பண உதவி தேவைப்படுவதாகவும் கூறி நாடகமாடியுள்ளார். பின்னர், அந்தப் பணத்தை தனது நண்பன் விஜய்யிடம் கொடுக்க வேண்டும் என்று அப்பெண்ணிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ரித்தேஷ் மீது பரிதாபப்பட்ட அந்த பெண், பணம் தர சம்மதித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பெங்களூரு மேம்பாட்டு ஆணைய (BDA) வளாகம் அருகே விஜய்யை சந்தித்து ரூ.1.5 லட்சம் பணத்தை அந்தப் பெண் கொடுத்துள்ளார். உண்மையில், ரித்தேஷ் தனது நண்பர் விஜய்யின் தொடர்பு விவரங்களை தான் அப்பெண்ணிடம் கொடுத்திருந்தார். ஆனால், விஜய்யாக அந்தப் பெண்ணிடம் பேசியது ரித்தேஷேதான்.
இந்த சூழலில், அந்தப் பெண் விஜய் வேறு ஒருவர் என நம்பி, அவரிடமும் பழக ஆரம்பித்தார். ரித்தேஷ், விஜய்யாக நடித்து அவரிடம் காதல் உறவை வளர்த்து, திருமண ஆசை காட்டி தனிப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலுக்கு முயன்றுள்ளார். அப்போது அப்பெண் மறுத்தபோது, அவர் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். ஆனாலும், விஜய் தனக்கு நிதி உதவியாக பணம் கொடுத்ததாகக் கூறி, ரித்தேஷ் தொடர்ந்து அப்பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.
ரித்தேஷின் இந்தக் கதையை முற்றிலும் நம்பிய அப்பெண், தனது தங்க நகைகளை கூட அடகு வைத்து, பல தவணைகளாக ஆன்லைன் மூலம் கூடுதல் பணம் அனுப்பியுள்ளார். ரித்தேஷை சகோதரர் போல் கருதி, ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை சொல்லி, அவருடன் நல்லுறவை பேணி வந்துள்ளார்.
ரூ.7 லட்சம் மோசடி : இறுதியில் ஒருமுறை அப்பெண் ரித்தேஷுக்கு அழைத்தபோது, அவர் தன்னைத் தெரியாது என்று மறுக்கவே, ரித்தேஷும் விஜய்யும் ஒரே நபர்தான் என்ற உண்மை அவருக்கு வெளிச்சத்திற்கு வந்தது. தனது இரட்டை வேடம் மூலம் ரித்தேஷ் படிப்படியாக அந்தப் பெண்ணிடம் இருந்து மொத்தம் ரூ.7 லட்சம் பணத்தை அபகரித்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் வங்கி ஊழியர் அன்னபூர்ணேஷ்வரி நகர் காவல் நிலையத்தில் ரித்தேஷ் மீது மோசடி புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் தற்போது இந்த மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆன்லைன் மோசடிகள் மற்றும் சமூக சமூக வலைதளங்களில் தெரியாத நபரிடம் பழகும்போது விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications