பெங்களூரு: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் படை இருக்கிறது. குறிப்பாக அந்தந்த ஊர்களை சேர்ந்த அணிகளுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர்கள் எல்லாம் ஒரு போட்டியை கூட தவறவிடாமல் காண்பார்கள். அப்படி பெங்களூருரை சேர்ந்த ஒரு பெண், ஐபிஎல் போட்டியை காண பொய் சொல்லி பர்மிஷன் போட்டு தன்னுடைய முதலாளியிடம் சிக்கி கொண்டார்.

பெங்களூருவை சேர்ந்தவர் நேஹா திவேதி. இவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தீவிர ரசிகை. கடந்த இரண்டாம் தேதி பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இ
ந்த போட்டியை மைதானத்திற்கு சென்று நேரில் காண வேண்டுமென நேஹா திவேதிக்கு விருப்பம். இதற்காக முயற்சி செய்து டிக்கெட்டும் வாங்கிவிட்டார். ஆனால் அன்றைய தினம் அலுவலகத்தில் வேலை.
வேலையை முடியாத நிலையில், ரஜினிகாந்தின் தில்லுமுல்லு பட பாணியில் யோசித்த நேஹா, வீட்டில் ஒரு எமர்ஜென்சி நான் உடனடியாக கிளம்ப வேண்டுமென மேனேஜருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அவரும் உடனடியாக அதனைக் கண்டு அவருக்கு பர்மிஷன் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் மேனேஜர் எதேச்சையாக டிவியில் ஐபிஎல் போட்டியை பார்த்துள்ளார். அப்போது கேலரியில் நேஹா அமர்ந்திருப்பதையும் போட்டியை ரசித்து வருவதையும் கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
நீங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தீவிரமான ரசிகையா என கேட்டிருக்கிறார். அவரும் ஆமாம் எனக் கூறியிருக்கிறார். இப்பொழுது தான் உங்களது சோகமான முகத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன் என மேனேஜர் கூறியதும் நேஹாவிற்கு அதிர்ச்சியாகியுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஸ்க்ரீன்ஷாட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேஹா பதிவிட்டுள்ளார். இது கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. தில்லுமுல்லு படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இதேபோல பொய் சொல்லி லீவு போட்டு மேட்ச் பார்க்க சென்று முதலாளியிடம் சிக்கி கொள்வார். பின்னர் பொய் கூறி அதனை சமாளிப்பார். இந்த சம்பவம் தில்லுமுல்லு படத்தை நினைவுக்கு கொண்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் நினைவு கூர்ந்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications