இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அறியப்படும் பெங்களூரில் காஸ்ட் ஆப் லிவிங் மிக அதிகமாகும். மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசலுக்குப் பேர்போன பெங்களூரில் உபர், ஓலா வாகன கட்டணம் ஒருவரது மாதச் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை காலி செய்து விடும். அண்மையில் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் அவரது வீட்டு வாடகையில் பாதி அளவுக்கு மேல் உபர் வாகனக் கட்டணமாக செலுத்தி நொந்து நூடுல்ஸாகி விட்டார்.
அந்தப் பெண் தனது உபர் வாடகைக் கட்டணத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்தால் நமக்கு நெஞ்சே அதிர்ச்சியில் நின்று விடும். ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து ஜூலை 25-ஆம் தேதிவரை அந்தப் பெண் உபரில் 74 முறை பயணம் செய்துள்ளார். இதற்கு அவர் வாடகைக் கட்டணமாக ரூ.16,600 செலுத்தியுள்ளார்.

மிரள வைக்கும் இந்தப் பதிவு இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இதுவரை 1 லட்சம் பேருக்கு மேல் அந்தப் பதிவை பார்த்துள்ளனர். அந்தப் பதிவுக்கு ஆயிரக்கணக்கான கமெண்ட்களும் பதிவாகியுள்ளன.
ஒருவர் செய்த பதிவில், இப்படி வாடகைக்கு பணத்தை இரைத்ததற்கு நீங்களே சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்கியிருக்கலாம். வாகனத்துக்கான மாத தவணை கூட இந்த வாடகைக் கட்டணத்தை விட குறைவாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், இந்த அளவுக்கு கட்டணம் செலுத்தியதற்கு உங்களை தலைமேல் தூக்கி வைத்து உபர் உங்களுக்கு லாயல்டி கார்டை தந்திருக்க வேண்டும் என்றுள்ளார்.
மூன்றாவதாக ஒருவர், ஒரு சைடு வாடகை ரூ.700 செலுத்துவது என்றால் இதை என்னவென்று சொல்வது. நாடு எதை நோக்கி போகிறது என்று தெரியவில்லை. நல்லவேளையாக நான் தினமும் அலுவலகத்துக்குச் செல்லத் தேவையில்லை. அப்படியிருந்தால் நான் காலி என்று பதிவிட்டுள்ளார்.
நான்காவதாக ஒருவர், நீங்கள் செலுத்திய வாடகைக்கு பதிலாக ஒரு பலீனோ அல்லது ஐ10 காரை இஎம்ஐயில் வாங்கியிருக்கலாம் எனக் கூறியுள்ளார். அடுத்ததாக ஒரு பதிவர், இந்த மாதிரிலாம் ஆகும்னு தான் நான் ஒரு டூ வீலரை வாங்கி விட்டேன். சூப்பர் கன்வீனியன்ட்டாக இருக்கிறது. போக வேண்டிய இடத்தைப் பற்றி யோசிக்கவே தேவையில்லை. சல்லுனு வண்டியை ஸ்டார்ட் செஞ்சு போயிட்டே இருக்கேன்.
சும்மா தேவையில்லாம உபர் புக் பண்ணி அப்புறம் கேன்சல் செய்து அதுக்கு தண்டமா பைன் கட்டலாம் தேவையே இல்லை என்று கூறியுள்ளார். இப்படி ஆயிரக்கணக்கான அட்வைஸ்கள் அந்தப் பெண்ணுக்கு சோசியல் மீடியாவில் குவிந்தபடி இருக்கிறது.
வீட்டு வாடகையில் பாதிக்கு மேல் இப்படி வாடகை காருக்கு, ஆட்டோவுக்கு தந்தால் பிழைப்பு என்னாவது. பேசாமல் சொந்த வண்டி வாங்கிவிடுங்கள் என்பதுதான் பெரும்பாலானவர்களின் அறிவுரையாகும்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications