பொட்டு விற்பனையில் ரூ.20 லட்சம் வருமானம்..!! பெங்களூரு பெண்ணின் வெற்றி கதை..!!

சுயதொழில்கள் எப்போதுமே ஆச்சர்யம் தருபவை. இது கிளிக் ஆகும் என நினைத்து தொடங்கும் தொழில்கள் தோல்வி அடையும், இதெல்லாம் ஒரு பிஸ்னஸா என நினைக்கும் தொழில்கள் வெற்றியை தேடி தரும். அப்படி தான் பொட்டு விற்பனையிலேயே பல லட்சங்களை வருமானமாக ஈட்டி வருகிறார் ஒரு பெண்.

பெங்களூரைச் சேர்ந்த மேக்னா கன்னா என்ற பெண், பொட்டு தயாரிக்கும் தொழிலை ஒரு தனித்துவமான ஃபேஷன் பிராண்டாக மாற்றி சாதனை படைத்துள்ளார். 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட The Bindi Project என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், தற்போது பாலிவுட் பிரபலங்களையும் கவர்ந்து, ஆண்டிற்கு 20 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

பொட்டு விற்பனையில் ரூ.20 லட்சம் வருமானம்..!! பெங்களூரு பெண்ணின் வெற்றி கதை..!!

மேக்னா கன்னா புனேவில் மார்க்கெட்டிங் மற்றும் ஃபைனான்ஸில் எம்பிஏ பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் கார்ப்பரேட் துறையில் பணியாற்றிய அவர், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தால் வேலையை விட்டுள்ளார். 2002-ஆம் ஆண்டு Levitate என்ற பெயரில் கைவினை பொருள் மற்றும் ஆபரண கடை ஒன்றை அவர் தொடங்கினார். சுமார் 18 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்ட இக்கடை, எதிர்பாராதவிதமாக கோவிட் பெருந்தொற்று காரணமாக 2020-ஆம் ஆண்டில் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வியாபாரம் நின்றுபோனாலும் மேக்னாவின் தொழில் ஆர்வம் குறையவில்லை. 2022-ஆம் ஆண்டில் தான் வித்தியாசமான பொட்டுகளை தயாரிக்கும் தொழிலில் இறங்கினார். இந்தியாவில் பொட்டுகள் கலாச்சாரத்தின் மிக முக்கியமான பகுதியாக இருந்தாலும், அவை வழக்கமான நிறங்களிலும் வடிவங்களிலுமே கிடைக்கின்றன என்பதையும், பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் (use-and-throw) வகையிலேயே உள்ளன என்பதையும் அவர் கண்டறிந்தார்.

Also Read

எனவே பாரம்பரியம் மாறாமல், அதே நேரத்தில் நவீன மற்றும் வித்தியாசமான வடிவங்களில் பொட்டுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அப்படி 5 லட்சம் முதலீட்டில் தி பிந்தி பிராஜெக்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இவர் தயாரிக்கும் பொட்டுகள் முற்றிலும் கையால் தயாரிக்கப்பட்டவை மற்றும் பலமுறை பயன்படுத்த கூடியவை.

பாரம்பரிய உடைகள் தொடங்கி நவீன உடைகள் வரை அனைத்து வயதிற்கும் ஏற்ற டிரெண்டிங்கான பொட்டுகளை தயாரித்து விற்பனை செய்தார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளங்களை மேக்னா திறம்பட பயன்படுத்தினார். இவரது இந்த வித்தியாசமான மற்றும் பாரம்பரியமிக்க கைவினைப் பொட்டுகள் சாதாரண வாடிக்கையாளர்களை தாண்டி இந்தியாவின் முன்னணி பாலிவுட் திரைநட்சத்திரங்களான கரீனா கபூர், கஜோல், சோனம் கபூர் மற்றும் தமன்னா போன்ற பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்தது. பிரபலங்கள் இவரின் பொட்டுகளை பயன்படுத்தியது பிராண்டின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

Recommended For You

தனது வணிகத்தின் முதல் ஆண்டில் 10 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டிய இவர் இரண்டாம் ஆண்டில் அதனை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தினார். தனது வணிகத்தின் மொத்த வருவாயில் 35% முதல் 40% வரை வடிவமைப்பு , பேக்கிங் மற்றும் டெலிவரி செலவுகளுக்குப் பயன்படுகிறது. மேலும், வாடகை, ஊழியர்களின் சம்பளம் மற்றும் மார்க்கெட்டிங் போன்ற இதர செலவுகளுக்கு 30% போக, மீதமுள்ள 30% தொகையை லாபமாக ஈட்டுவதாக மேக்னா கன்னா குறிப்பிட்டுள்ளார். பொட்டு வைக்கும் வழக்கத்தை மீண்டும் ஒரு ஃபேஷன் டிரெண்டாக மாற்றுவதே தனது இலக்கு என பெருமையுடன் தெரிவிக்கிறார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+