பெங்களூரு: நம்ம யாத்ரி மகிளா சக்தி ஆட்டோ ஓட்டும் திட்டம் மூலம், பெங்களூருவில் சுமார் 100 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் மொத்தமாக 42 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பெரும் நகரங்களில் எல்லாம் தனியார் வாடகை செயலிகள் மூலம் ஆட்டோ, கார் உள்ளிட்டவற்றை புக் செய்து பயன்படுத்துகிறோம். இதனிடையே பெண் ஆட்டோ ஓட்டுநர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கான வருமான வாய்ப்பை ஏற்படுத்தி தரவும் ஓலா, உபர் உடன் போட்டிப்போடும் நம்ம யாத்ரி நிறுவனம் மகிளா சக்தி ஆட்டோ திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் பெண்கள் ஆட்டோ ஓட்டுவது ஊக்குவிக்கப்படுவதோடு பெண்களுக்கான நிதி சுதந்திரமும் கிடைக்கிறது. பெங்களூருவில் நம்ம யாத்ரி திட்டம் மூலம் சுமார் 100 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் மொத்தமாக 4 லட்சம் கிலோமீட்டர்களுக்கு ஆட்டோ ஓட்டி 42 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளனர் என கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்த செயலியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டோ ஓட்டும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களாக மாறுவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படுகிறது என தெரிவித்த அவர் சமூக கட்டமைப்புகளையும் இவர்கள் மாற்றி வருகின்றனர் என கூறினார்.
அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் இது உதவுகிறது என தெரிவித்தார். பெங்களூரில் இருக்கும் பெண்களின் வலிமைக்கு இந்த திட்டம் மிகப்பெரிய சான்றாகும் என பெருமிதம் தெரிவித்த அவர், பெண்கள் மேற்கொண்டு தங்கள் வாழ்க்கையில் முன்னேற தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என உறுதி அளித்தார்.
ஆட்டோ ஓட்டுவதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவது மற்றும் ஆட்டோ வாங்குவதற்கு தேவையான கடன்களை வழங்குவது, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான உதவிகளை செய்வது என பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்லவி என்ற ஒரு ஆட்டோ ஓட்டுநரும் கலந்து கொண்டார் அவர் தனது மகனின் மருத்துவ செலவுகளுக்கான நிதியை பெறுவதற்காக இந்த திட்டத்தில் இணைந்து, தற்போது மகனுக்கு தேவையான பணத்தை சேமித்து கூறினார்.
அதேபோல டெலிவரி நபராக வேலை பார்த்து வந்த ராஜலக்ஷ்மி என்ற பெண் தற்போது நம்ம யாத்ரி மூலம் ஆட்டோ ஓட்டி கடந்த ஆறு மாத காலங்களில் சுமார் 1,75,000 வருமானமாக ஈட்டு இருக்கிறாராம். பல்வேறு பெண்களும் இந்த திட்டத்தில் இணைந்து தங்களுடைய கடன்களை தீர்த்து இருப்பதாகவும் சிலர் சொந்தமாகவே ஆட்டோக்களை வாங்கி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
நம்ம யாத்ரி திட்டத்தில் பெங்களூருவில் கர்நாடக அரசு பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்கான பயிற்சி மற்றும் போக்குவரத்து விதிமுறைகள், செயலியை பயன்படுத்தும் திறன் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் திறன்களை கொண்ட இலவசமான ஒரு மாத கால பயிற்சியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் இணைய விரும்பும் பெண்கள் நம்ம யாத்ரியை 080-6972 4800 என்ற எண்ணிலும், வாட்ஸ் அப் மூலம் 86189 63188 என்று எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications