பிரபல நிறுவனம் ஒன்றில் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் HR பதவியில் இருந்த பெண், அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக பேக்கிங் ஐட்டங்களை தயாரிக்கும் தொழிலை தொடங்கியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் பிறந்தவர் அஸ்மிதா, இவரது கணவர் சாகர். எம்பிஏ பட்டதாரியான அஸ்மிதா, பிரபல கார்ப்பரேட் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் HR பதவியில் இருந்துள்ளார். தற்போது பெங்களூருவில் வசிக்கும் அஸ்மிதா, பொழுதுபோக்காக 2020ல் கேக் செய்ய தொடங்கியுள்ளார். இதையடுத்து, அஸ்மிதாவுக்கு இதன்மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்காக Lavonne Academy of Baking Science and Pastry Arts இன் சான்றிதழ் படிப்பை முடித்துள்ளார். இதையடுத்து, தொழில் ரீதியாக பேக்கிங் செய்ய தொடங்கிய அஸ்மிதா, தனது HR பதவியை விட்டுவிட்டார். இதையடுத்து, முழுநேரமாக பேக்கிங் தொழிலில் இறங்கிய அஸ்மிதா, அவர் செய்யும் பேக்கிரி ஐட்டங்கள் தயாரிப்பது குறித்து கடந்த ஜனவரி 12, 2024 அன்று, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து அந்த தயாரிப்புகள் கணிசமாக மக்களை கவர்ந்துள்ளது. இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் இந்த தயாரிப்புகளை அஸ்மிதா விற்பனை செய்து வருகிறார். இதுதொடர்பாக கடந்த 25ம் தேதி அஸ்மிதாவின் கணவர் சாகர், இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு மாம்பழ வெண்ணிலா கேக்குகளை மனைவி அஸ்மிதா தயாரித்துள்ளார். இந்த தயாரிப்பிற்காக என் மனைவி, ரூ.1.5 மாத சம்பள பணியை விட்டுவிட்டார். இதை செய்ததற்காக கடவுளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு வைரலாகி சில நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், அஸ்மிதாவின் முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருவதோடு அவரை ஊக்கமளித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, அவரது பேக்கிங் தயாரிப்புகளுக்கு அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வருகிறது.
இதுகுறித்து, அஸ்மிதா கூறுகையில், பெங்களூரு வாய்ப்புகளின் நகரம், இந்த மக்கள் ரிஸ்க் எடுப்பது, நிறுவனங்களை உருவாக்குவது மற்றும் முயற்சிப்பது போன்றவற்றில் நான் ஈர்க்கப்பட்டேன். இதன் ஒருபகுதியாக இந்த தொழிலை தொடங்க நான் முடிவெடுத்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த தொழிலை தொடங்க குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு அடிப்படை விஷயங்களை ஈடுகட்ட போதுமான பணம் இருக்க வேண்டும். அதாவது, 12 மாதச் செலவுகளைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், வேலையை விட்டு விலகுவதற்கு முன் உங்கள் யோசனையைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள், இறுதியாக உங்களை முதலில் நீங்கள், நம்புங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications