பெங்களூர் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது ஐடி நிறுவனங்கள், எப்போதும் சிலுசிலுவென அடிக்கும் காற்று, அடுத்தது மோசமான டிராபிக். இந்தியாவின் மாபெரும் டெக் நகரமாக இருக்கும் பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் தீர்க்க முடியவில்லை.
இந்த நிலையில் Karnataka's Decade - Roadmap to $1 Trillion Economy என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியானது, இதில் பெங்களூரில் முக்கிய சாலைகளுக்குள் நுழைய congestion tax என்ற கட்டணத்தை வசூலிக்கவும், இதை நகரத்தின் முக்கியமான 9 சாலைகளில் நிறுவ வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரில் தற்போது தினமும் 1.2 கோடி வாகனங்கள் நுழைகின்றன. இந்த அறிக்கையின்படி, ஏறக்குறைய 1.2 கோடி குடிமக்கள் ஆண்டு தோறும் 60 கோடி மணிநேரத்தை (person-hours)வீணடிக்கிறார்கள், அத்துடன் ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 2.8 லட்சம் லிட்டர் எரிபொருளையும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக வீணடிக்கிறார்கள்.
2007 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், பெங்களூரில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் 280 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இக்காலக்கட்டத்தில் 21 லட்சத்தில் இருந்து 80 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதன் மறுப்பக்கத்தில் பெங்களூர் நகரத்தின் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பு தற்போது வெறும் 48% செயல்திறனில் இயங்குகிறது, போக்குவரத்து சேவைக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில் இதே ஈடுசெய்ய முடியாத நிலையில் மாடிக்கொண்டு உள்ளது பெங்களூர் நகரம்.
Congestion Tax என்றால் என்ன? : நெரிசல் வரி என்பது குறிப்பிட்ட நகர பகுதிகளில் பீக் நேரத்தில் நுழையும் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது லண்டனில் பயன்பாட்டில் இருக்கும் ஒரு முறையாகும்.
இந்த கட்டமைப்பு பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நகரின் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும், கிரீன் ஹவுஸ் கேஸ் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும், தனியார் வாகனங்களில் இருந்து பொது போக்குவரத்து முறைக்கு மாறுவதற்கு மக்களை ஊக்குவிப்பதன் மூலம் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை மேம்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.
ஒன்பது சாலைகள்: பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வரி விதிக்க வேண்டும் என இந்த அறிக்கையில் பட்டியலிட்டு உள்ள பகுதிகளில் சர்ஜாபூர் சாலை, ஓசூர் சாலை, பழைய விமான நிலைய சாலை, பழைய மெட்ராஸ் சாலை, பல்லாரி சாலை, பன்னர்கட்டா சாலை, கனகபுரா சாலை, மாகடி சாலை, மேற்கு சோர்டு சாலை மற்றும் துமகுரு சாலை ஆகியவை இப்பட்டியலில் அடங்கியுள்ளது.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications