பெங்களூரு: இந்தியாவின் டெக் நகரமாக இருக்கும் பெங்களூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் கடுமையாகி வருகிறது, இந்த நிலையில் நகரின் இந்த மோசமான நிலையை களைய பெங்களூரின் பல பகுதிகளில் சாலை விரிவாக்கம், மெட்ரோ, மேம்பாலம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கர்நாடக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் பணிகளில் ஒரு பகுதியாக பெங்களூருவில் முதல் இரண்டடுக்கு மேம்பாலம் (double-decker flyover) அமைக்கும் பணி பல்வேறு தாமதங்களுக்கு பிறகு நிறைவு பெற்றுள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்கட்டமாக 3.3 கிலோமீட்டர் தொலைவிலான இரண்டடுக்கு மேம்பால பணிகள் நிறைவடைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அதாவது பெங்களூரின் மிக முக்கிய பகுதியாக இருக்கும் ராகிகுட்டா (Ragigudda) முதல் செண்ட்ரல் சில்க் போர்டு ( Central Silk Board) வரை இரண்டடுக்கு மேம்பால பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த பாதையில் தான் மெட்ரோவின் மஞ்சள் லைன் செல்கிறது.
இந்த இரண்டடுக்கு மேம்பாலத்தில் தற்போது பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு வாகன ஓட்டிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கீழடுக்கில் உள்ள மேம்பாலமானது வாகனங்கள் ஓட்டுவதற்கு பயன்படுத்தப்படும். மேலடுக்கில் உள்ள பாலமானது மெட்ரோ ரயில்களுக்கான பாலம் ஆகும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் சாலையிலிருந்து 8 மீட்டர் உயரத்தில் வாகனங்களுக்கான மேம்பாலமும், 16 மீட்டர்கள் உயரத்தில் மெட்ரோ ரயிலுக்கான மேம்பாலமும் கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே ஜெய்ப்பூர், நாக்பூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இது போன்ற சாலை மற்றும் மெட்ரோ ஆகிய இரண்டும் இணைந்த கட்டமைப்புகள் பயன்பாட்டில் இருக்கின்றன. பெங்களூருவில் இது முதன்முறையாக பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
மெட்ரோ மற்றும் சாலை பணிகள் என தனி தனியாக வேலை செய்வது, போக்குவரத்தை மாற்றுவது, கட்டுமான செலவினம் உள்ளிட்டவை அதிகமாகும். ஆனால் இரண்டையும் இப்படி ஒருங்கிணைந்து செய்யும் போது மக்களின் சிரமம், செலவினம் ஆகியவை குறையும்.
பெங்களூருவை பொறுத்தவரை இது போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வை தரும். பெங்களூரு மெட்ரோ மற்றும் கர்நாடகா மாநில சாலை போக்குவரத்து அமைச்சகம், பெங்களூரு மாநகராட்சி ஆகிய மூன்றும் இணைந்து இந்த பணியை வெற்றிகரமாக முடித்துள்ளன.
பெங்களூருவில் மெட்ரோ மேம்பாலம் அமைக்கப்படும் இடங்களில் எல்லாம் இது போன்ற வாகன போக்குவரத்துக்கான கட்டமைப்பையும் சேர்த்து செய்ய முடியுமா என்பது ஆய்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மேம்பாலம் சென்ட்ரல் சில்க் போர்டு வரையிலான சிக்னல் ஃப்ரீ காரிடாராக இருக்கிறது. நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க இது உதவும் என நம்பப்படுகிறது.
இனி ராகிகுண்டாவில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் எந்த ஒரு சிக்னலிலும் நிற்காமல் சென்ட்ரல் சில்க் போர்டு வழியாக ஓசூர் ரோடு சென்று அடையலாம் என மெட்ரோ நிறுவனத்தின் சிறப்பு தகவல் தொடர்பு அதிகாரி யஸ்வந்த் சாவன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவைப் பொறுத்தவரை அவுட்டர் ரிங் ரோடு மற்றும் ஓசூர் ரோடு ஆகியவற்றை இணைக்க கூடிய இந்த சில்க் போர்டு ஜங்ஷன் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு பகுதியாகவே காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications