பெங்களூரு: இந்தியாவில் நகரங்கள் வளர்ச்சி அடைய வளர்ச்சி அடைய அங்கே ரியல் எஸ்டேட் மதிப்பும் வீட்டு வாடகையும் உயர்ந்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பெங்களூரு , சென்னை உள்ளீட்ட நகரங்களில் வீட்டு வாடகை மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
சராசரியாக இரண்டு படுக்கையறை கொண்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றாலும் 40 ஆயிரத்திலிருந்து செலவு செய்ய வேண்டியிருப்பதாக சென்னைவாசிகள் புலம்புகின்றனர். ஆனால் பெங்களூரில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.

கிரேப்வைன் தளத்தில் ஒரு பயனர் வெளியிட்டுள்ள தகவலில் ஊதியம் உயர்கிறதோ இல்லையோ அதைவிட வேகமாக வீட்டு வாடகை உயர்கிறது, வீட்டு உரிமையாளருக்கு வேலை பார்ப்பது போல இருக்கிறது என பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தை பெற்றுள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில் பெங்களூருவின் பிரதான பகுதிகளில் மூன்று படுக்கையறை கொண்ட வீட்டின் வாடகை 90 ஆயிரம் ரூபாய் சர்ஜாபூர் பெல்லாந்துர் பகுதிகளில் கூட 70 ஆயிரம் ரூபாயாக வீட்டு வாடகை உயர்ந்து விட்டது என கூறியுள்ளார்.
நம்முடைய வீட்டு வாடகை உயரும் அளவுக்கு சம்பளம் உயர்கிறதா இல்லை, இப்படியே சென்றால் நம்முடைய நிலைமை என்ன ஆகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சம்பளம் அதிகரிக்கும் வேகத்தை விட வீட்டு வாடகைகள் மதிப்பு வேகமாக அதிகரிக்கிறது என அவர் கவலை தெரிவித்துள்ளார் . பெங்களூரில் மட்டும் இந்த நிலைமை கிடையாது டெல்லியில் என்சிஆர், குரு கிராம், மும்பை ஆகிய பகுதிகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது என அவர் கூறியுள்ளார் .
அவருடைய இந்த பதிவுக்கு பலரும் கருத்து பதவிட்டுள்ளனர். ஒரு பயனர் என்னுடைய ஆண்டு சம்பளமும், ஆண்டு வீட்டு வாடகையும் ஒன்றுதான் எனக் கூறியுள்ளார். கடந்தாண்டு எனக்கு 8 சதவீதம் தான் சம்பள உயர்வு கிடைத்தது ஆனால் என்னுடைய வீட்டு வாடகை 10 சதவீதம் உயர்ந்து விட்டது என தெரிவித்துள்ளார். ஆனால் எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்னுடைய வீட்டில் நாங்கள் இருவருமே சம்பாதிக்கிறோம் என்பது தான் என அவர் கூறியுள்ளார்.
ஒருவர் மட்டுமே சம்பாதிக்க கூடிய வீடு என்றால் நிச்சயமாக பெங்களூரில் வசிப்பது மிக மிக கொடுமையானதாக இருக்கும் என்றும் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது வீட்டு உரிமையாளருக்காகவே இருக்கும் என்றும் வேதனையாக தெரிவித்துள்ளார் ஒரு பயனர். ஒரு பயனர் மாதம் 70,000 ரூபாய் வீட்டு வாடகை செலுத்துவதற்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிவிட்டு மாதம் தோறும் 50 ஆயிரம் ரூபாய் இஎம்ஐ செலுத்தி விடலாமே சில காலங்களில் உங்கள் பெயரில் ஒரு சொத்தாவது உருவாகும் என ஒரு பயனர் யோசனை கூறியுள்ளார்.
பெங்களூருக்கு வரும் இளைஞர்கள் 10 பேராக ஒரு வீடு எடுத்து தங்குகிறார்கள் 70 ஆயிரம் ரூபாய் வாடகையை பத்து பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள் எனவே அவர்களுக்கு 7000 ரூபாய் தான் வாடகை இது ஹாஸ்டலை விட குறைவாக இருக்கிறது ,இதுபோன்ற நபர்களால் வீட்டு உரிமையாளர்கள் குடும்பமாக செல்பவர்களுக்கும் இதே வாடகை தான் நியமிக்கிறார்கள் வீட்டில் ஒருவர் மட்டுமே சம்பாதிக்கிறார் எனும் போது இது எப்படி சமன் செய்ய முடியும் என ஒரு பயனர் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications