பெங்களூரு, இந்தியாவின் தொழில்நுட்ப மையமாக இருக்கிறது. இருப்பினும், தற்போது பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், இப்போது வேலை இழப்பு, உயர்ந்த செலவுகள் மற்றும் கடுமையான விதிமுறைகள் போன்ற பிரச்சனைகளால் அதிக சிரமம் அனுபவிக்கிறார்கள். இதனால், PG தங்குமிடங்கள் அதிக எண்ணிக்கையில் மூடப்படுகின்றன.
இதையடுத்து, முந்தைய காலங்களில், பெங்களூருவில் உள்ள PG தங்குமிடங்கள் மிகவும் பிரபலமானவை. இதை வேலைக்காக நகரம் வருகிற இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், புது பட்டதாரிகள் என பலரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது, ஐ.டி. துறையில் பலர் வேலையை இழந்ததால், இந்த தங்குமிடங்களில் யாரும் தங்குவதற்க்கு வரவில்லை.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு PG தங்குமிடத்தில் நடந்த கொலை சம்பவத்துக்குப் பிறகு, அரசு அதிக பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்தியது. பல PG விடுதிகள் இந்த புதிய விதிகளுக்கு ஏற்ப தயாராக இல்லாததால், பிபிஎம்பி (BBMP-Bruhat Bengaluru Mahanagara Palike) பல விடுதிகளை மூடியது. உதாரணமாக, 40 அடி அகலமில்லாத சாலைகளில் PG விடுதி இயங்கக்கூடாது என்ற விதி கொண்டு வந்தது. பிறகு, பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றுகள் கட்டாயம் என்று கூறியது. மற்றும் வர்த்தக உரிமம் இல்லாத விடுதிகள் மூடப்பட்டது. இதனால், Marathahalli, Sarjapur போன்ற பகுதிகளில் ஏற்கனவே பரபரப்பாக இருந்த PGகள் தற்போது வெறிச்சோடியாக இருக்கிறது.
மேலும், மின்சாரம், தண்ணீர், கண்காணிப்பு சேவைகள் ஆகியவை எல்லாம் அதிக விலை ஆகி விட்டன. இதனால், PG உரிமையாளர்கள் அதிக பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செலவு செய்ய முடியாத நிலையில் இருப்பதால், வாடகையை உயர்த்த முடியாமல் PG உரிமையாளர்கள் நஷ்டத்தில் உள்ளனர். இது குறித்து ஒரு PG உரிமையாளர் கூறுகையில், மாணவர்கள் வாடகையை செலுத்த முடியாத நிலை உள்ளது. ஆனால், நாங்கள் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகி விட்டது என்றார்.
இந்நிலையில், பிபிஎம்பி தற்போது சில கடுமையான விதிகளை திரும்பப் பெறலாம் என்று பரிசீலித்து வருகிறது. குறிப்பாக 40 அடி சாலை விதி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை மாற்றலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.இதனால், பெங்களூரு நகரத்திற்கு வேலை தேடி வந்த இளம் மக்கள், தற்போது தங்குமிடங்களை இழந்துள்ளனர். வாடகை அதிகமாக உள்ள நிலையில், மலிவான தங்குமிடங்கள் இல்லாததால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனினும், PG விடுதிகள் ஒரு காலத்தில் கனவு காணும் இளைஞர்களுக்கான முதல் தங்குமிடமாக இருந்தது. இன்று, வேலை இழப்பு, கடுமையான விதிகள், மற்றும் அதிக செலவுகள் காரணமாக, அந்த வாய்ப்பு குறைந்து வருகிறது. இது பெங்களூருவில் வாழும் பல இளைஞர்களின் வாழ்க்கையை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications