கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழில்துறை ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. டாடா, ஏத்தர், டிவிஎஸ், ஓலா மற்றும் பல்வேறு எம்எஸ்எம்ஈ நிறுவனங்களும் தங்களின் உற்பத்தி ஆலைகளை ஓசூரில் நிறுவியிருக்கின்றன.
தமிழ்நாடு அரசு ஓசூருக்கு என தனி கவனம் செலுத்தி பல்வேறு முதலீடுகளை ஈர்த்துள்ளது , பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும் முடிவு செய்திருக்கிறது . குறிப்பாக ஓசூர் நகரத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் தரும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது. இதன் பொருட்டு ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஓசூரில் பேரிகை என்ற இடத்தில் விமான நிலையத்தை கட்டமைக்கலாம் என தமிழ்நாடு அரசு இடம் தேர்வு செய்து இருக்கிறது . இது பெங்களூரு மக்களையும் ஈர்க்கும் இடமாக இருக்கும் என்பது தமிழ்நாடுஅரசின் திட்டம். இது தொடர்பாக ஒப்புதல் கேட்டு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பி இருக்கிறது. இதற்கிடையே கர்நாடக மாநில அரசு பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்கும் பணிகளை கையில் எடுத்திருக்கிறது.
ஓசூர் விமான நிலையம் மற்றும் பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையம் ஆகிய இரண்டுமே கட்டப்பட வேண்டும் என்றால் தற்போது பெங்களூரில் செயல்பட்டு வரக்கூடிய கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தை நிர்வாகித்து வரக்கூடிய பெங்களூரு விமான போக்குவரத்து கழகம் ஒப்புதல் தர வேண்டும்.
பெங்களூருவில் இந்த விமான நிலையத்தை கட்டும்போது பெங்களூரு விமான போக்குவரத்து கழகம் 2033 ஆம் ஆண்டு வரை இந்த விமான நிலையத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவுக்குள் புதிதாக எந்த ஒரு விமான நிலையமும் கட்டப்படக்கூடாது என மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தம் தான் ஓசூர் விமான நிலையத்திற்கு தற்போது பெரிய இடையூறாக வந்து நிற்கிறது .
தமிழ்நாடு அரசு ஓசூர் விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்துவிட்டது, பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு ஒப்புதல் கேட்டு கடிதமும் அனுப்பி இருக்கிறது. இதற்கு ஒப்புதல் கிடைத்த உடனே நிலத்தை கையகப்படுத்தி பணிகளை தொடங்க தயாராக இருக்கிறது .

ஆனால் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் அனுமதி கொடுத்தால் தான் ஓசூர் விமான நிலையம் கட்ட முடியும். பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிற்குள் இருப்பதால்தான் மத்திய அரசு உடான் திட்டத்திலிருந்து ஓசூர் விமான நிலையத்தை நீக்கியதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் தமிழ்நாடு அரசு உடன் திட்டம் இல்லாமல் தனிப்பட்ட முறையிலேயே ஓசூர் விமான நிலையத்தை கட்டமைப்பதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.
கர்நாடக மாநில அரசு ஓசூர் விமான நிலையத்திற்கு போட்டியாக தெற்கு பெங்களூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையத்தை கட்டமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இடம் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வரக்கூடிய சூழலில் இந்த விமான நிலையத்திற்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் அனுமதி அவசியம். ஆனால் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்தில் கர்நாடக அரசு ஒரு பங்குதாரர். அதாவது 13 சதவீத பங்குகளை கர்நாடக மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் கொண்டிருக்கிறது.
எனவே இந்த நிறுவனத்தின் முடிவுகளில் தலையிடக்கூடிய உரிமையும் அதிகாரமும் கர்நாடகா அரசுக்கு இருக்கிறது. ஒரு பங்குதாரராக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் முடிவுகளில் கர்நாடக மாநில அரசுக்கும் ஒரு கை இருக்கிறது. எனவே கர்நாடக மாநில அரசு ஓசூர் விமான நிலைய திட்டத்தை மேலும் தள்ளிப் போடும் வகையிலும் பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலைய திட்டத்திற்கு அனுமதி பெறும் வகையிலும் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என சொல்லப்படுகிறது.
ஓசூர் விமான நிலைய திட்டத்தை வேண்டும் என்றே தாமதப்படுத்துவதற்காக கர்நாடகா அரசு ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை பெங்களூரு விமான நிலைய நிறுவனம் ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி தராமல் இருக்கும் பட்சத்தில் 2033 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் ஓசூர் விமான நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை அரசு தொடங்க முடியும். அப்படி இருந்தால் 2038 ல் தான் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications