பெங்களூரில் டெக் துறையின் வளர்ச்சி இரட்டை வாள் போல இருக்கிறது என இந்நகர மக்கள், குறிப்பாக வாடகை வீட்டில் இருக்கும் மக்கள் அதிகம் புலம்பி வருகின்றனர். ஒருபுறம் அதிக ஊதியம் தரும் டெக் துறை வேலைவாய்ப்புகள் மழை போல் பெய்து வருகிறது, ஆனால் அதே சமயம் அதிக சம்பளம் வாங்கும் டெக் ஊழியர்களால் பெங்களூரில் வீட்டு வாடகை ராக்கெட் வேகத்தில் பறக்க காரணமாகியுள்ளது.
சமீபத்தில் ரெட்டிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மாதம் 1.5 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை சம்பாதிக்கும் டெக்கிகள் தாங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அருகில் உள்ள கேட்டட் கம்யூனிட்டிகளின் ஆடம்பரமான குடியிருப்புகளுக்கு மாதம் 50,000, 60,000 அல்லது 70,000 ரூபாய் வரை வாடகையை செலுத்த தயாராக இருப்பதாக அந்த பதிவு தெரிவிக்கிறது.

இந்த அதிக வாடகை செலுத்தும் போக்கு மற்றவர்களையும் பாதிக்கிறது. சாதாரண சம்பளம் வாங்கும் மக்களுக்கு மலிவு விலையில் வீடு கிடைப்பது கடினமாகி வருகிறது. சமூக ஊடகங்களில் நடைபெற்ற விவாதத்தின் போது, வைட்ஃபீல்ட் பகுதியில் 3 BHK வீட்டிற்கு மாதம் 95,000 ரூபாய் வாடகை கேட்கப்பட்டதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒவ்வொரு இடத்திலும் அதிர்ச்சி அளிக்கும் வாடகை உள்ளது, இதேபோல் ஐடி நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் ஆடம்பர வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதனால் புதிதாக வீடு வாங்குவோருக்கும் இதில் பிரச்சனை ஏற்படுகிறது.
ரியல் எஸ்டேட் தரகர்கள் இதற்கு வேறு காரணம் கூறுகின்றனர். ஐடி ஹப்களுக்கு அருகில் மலிவு விலை வீடுகள் போதுமான அளவில் இல்லாததே இதற்கு காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் இயல்பாகவே போகுவரத்து வசதி மற்றும் ஆரம்பர வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இதனால் தங்கள் வேலை இடங்களுக்கு அருகில் இருக்கும் குறிப்பிட்ட பகுதிகளையே தேடுகின்றனர். இந்த பகுதிகளில் வாடகைக்கு கிடைக்கும் வீடுகள் குறைவாக இருப்பதால், தேவை அதிகரிக்க அதிகரிக்க வாடகையும் உயர்ந்து கொண்டே போகிறது என கூறுகின்றனர்.
இந்த நிலைமை ஒரு சிக்கலான சூழ்நிலையை உருவாக்குகிறது. பெங்களூருவின் டெக் துறையின் வளர்ச்சி பல விதத்தில் இந்நகருக்கு நன்மை சேர்த்தாலும், வீட்டு வசதி மலிவுத்தன்மை தொடர்ந்து குறைந்து வருவதால் சமூக சமத்துவமின்மையை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. இதனால் சாமானிய மக்களால் பெங்களூரில் வாழ முடியாத நிலை விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications