ரூ.1800 கோடி பணத்துடன் தென்னிந்தியாவுக்கு ஓடி வரும் பெர்ஜர் பெயிண்ட்ஸ்..!

இந்தியாவில் பெயிண்ட் விற்பனையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரக்கூடிய பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனம் தங்களது சில்லறை வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் புதிதாக ஆலைகளை அமைப்பது என பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 1800 கோடி முதலீடு செய்து செய்யவும் முன்வந்துள்ளது.

ரூ.1800 கோடி பணத்துடன் தென்னிந்தியாவுக்கு ஓடி வரும் பெர்ஜர் பெயிண்ட்ஸ்..!

இந்தியாவைப் பொறுத்தவரை பெயிண்ட் சந்தையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது பெர்ஜர் பெயிண்ட்ஸ் . இந்த நிறுவனம் சந்தை தேவைகளுக்கு ஏற்ப தங்களது ரீடெய்ல் விற்பனையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்காக புதிதாக ஆலைகளை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. நான்கு மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் அமைய இருக்கின்றன.

குறிப்பாக நான்கு தென்னிந்திய மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் சில்லறை வணிகத்துக்கான நெட்வொர்க் என்பது விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.

கூடுதலாக மகாராஷ்டிரா, குஜராத் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் புதிய உற்பத்தி ஆலைகளை அமைக்க இருப்பதாக நிறுவனத்தின் மேலாண் இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான அபிஜித் ராய் தெரிவித்துள்ளார்.

மிண்ட் தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் , "ஆண்டுதோறும் எங்கள் நிறுவனம் 4000 பெயிண்ட் கலவை இயந்திரங்களை புதிதாக இன்ஸ்டால் செய்யும். கடந்த ஆண்டு இது 7,300 என அதிகரித்தது, நடப்பாண்டில் 8,000-த்தை தாண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அடுத்த ஆண்டில் இது 9000 என்ற அளவை கூட எட்ட கூடும்" என அவர் கூறியுள்ளார். பெயிண்ட் டின்டிங் இயந்திரம் என்பது பல்வேறு வண்ணங்களை கலந்து பெயிண்டை உருவாக்கக்கூடிய இயந்திரங்கள் ஆகும்.

இதுவரை தங்களது நிறுவனம் கால்பதிக்காத இடங்களில் இந்த புதிய இயந்திரங்களை நிறுவ இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தங்களது சில்லறை விற்பனை கடைகள் இருக்கும் என ராய் கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது பெயிண்ட் உற்பத்திக்கான தேவை என்பது அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஏசியன் பெயிண்ட்ஸ் , பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனங்கள் சந்தையில் முன்னணி நிறுவனங்களாக போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆதித்யா பிர்லா குழுமம் பிர்லா ஓபஸ் என்ற புதிய பிராண்டினை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது.

இந்த நிலையில் தான் பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் தங்களது கடைகளை விரிவாக்கம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது நிறுவனம். கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்குவங்கம், ஒடிசா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் புதிதாக ஆலைகளை நிறுவியது. இதற்காக 1800 கோடியை முதலீடு செய்தது.

புதிதாக நிறுவப்பட இருக்கக்கூடிய ஆலைகள் 2026-27 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்திருக்கும் என ராய் தெரிவித்துள்ளார். பெர்ஜர் பெயிண்ட்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு சொந்தமாக இந்தியாவில் 25 ஆலைகள் செயல்படுகின்றன. இவற்றின் மொத்த உற்பத்தி திறன் 1.27 மில்லியன் டன்கள்.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+