புகழ்பெற்ற பங்குச் சந்தை முதலீட்டாளர் அமெரிக்காவை சேர்ந்த வாரன் பஃபெட். பிரபலமான பெர்க்ஷயர் ஹாத்வே குழுமத்தின் தலைவரும் இவர்தான். பெர்க்ஷயர் ஹாத்வே குழுமம், முதலீடு, இன்ஸ்யூரன்ஸ் உள்பட 189 வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது.
2024ம் ஆண்டு இறுதி நிலவரப்படி, பெர்க்ஷயரின் ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமான இருப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு 33,420 கோடி டாலரை எட்டியது. இது 2023ம் ஆண்டை காட்டிலும் சுமார் 2 மடங்காகும். 2023ம் ஆண்டில் ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமான இருப்புகள் மதிப்பு 16,760 கோடி டாலராக இருந்தது.

வாரன் பஃபெட் இவ்வளவு பெரிய கையிருப்பை வைத்திருப்பது, அவரது எச்சரிக்கையான முதலீட்டு அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. பல நிறுவனங்களின் சந்தை மதிப்பீடுகள் அதிகமாக இருப்பதால் அவை போதுமான வருமானத்தை உறுதியளிக்கவில்லை இதனால் அந்த பங்குகளை பெர்க்ஷயர் நிறுவனம் விற்பனை செய்தது. கவர்ச்சிக்கரமான முதலீட்டு வாய்ப்புகள் குறைவாக இருக்கும்போது, ரொக்க கையிருப்பை மேம்படுத்த வேண்டும் என்ற பஃபெட்டின் விருப்பத்தை இந்த உத்தி பிரதிபலிக்கிறது.
பெரிய ரொக்க இருப்பை வைத்திருப்பதன் மூலம் பெர்க்ஷயர் ஹாத்வே எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. குறிப்பாக, சந்தை சரிவுகளின் போது பங்குகள் விலை மிகவும் சாதகமாக இருக்கும்போது அவற்றில் முதலீடு செய்யும். இந்த அணுகுமுறை, நிறுவனம் எந்தவிதி நிதி கட்டுப்பாடுகள் இல்லாமல் குறிப்பிடத்தக்க கையகப்படுத்தல்கள் அல்லது முதலீடு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை கொண்டுள்ளது என்பதை உறுதி செய்கிறது.
ரொக்க கையிருப்பை அதிகரிக்கும் வாரன் பஃபெட்டின் முடிவு தற்போதைய பங்குச் சந்தையின் மீதான அவரது எச்சரிக்கையான பார்வையை குறிக்கிறது. உதாரணமாக S&P 500 அதிக மதிப்பீடுகளில் வர்த்தகம் செய்யப்படுவதால், அதிகப்படியான மதிப்பீடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த கவலை உள்ளது. பஃபெட்டின் இந்த விவேகமான நிலைப்பாடு, எதிர்காலத்தில் மிகவும் சாதகமான முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்பதை குறிக்கிறது. அதேசமயம் இந்த கையிருப்பை எவற்றில் முதலீடு செய்யப்படும் என்பது குறித்து வாரன் பஃபெட் தெரிவிக்கவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும்போது பெரிய அளவிலான முதலீடுகள் அல்லது கையகப்படுத்தலை மேற்கொள்ள ஹாத்வே நிறுவனத்துக்கு ஒரு ஊக்கத்தை இந்த கையிருப்பு அளிக்கிறது. இது பஃபெட்டின் பொறுமை மற்றும் தயார்நிலை முதலீட்டுத் தத்துவத்துடன் ஒத்துப்போகிறது.
பெர்க்ஷயரின் ரொக்க இருப்புகள் அதிகரித்து வருவதை ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்கால வாய்ப்புகளுக்கான தயார் நிலையின் அடையாளமாக பங்குதாரர்கள் பார்க்கலாம். சில முதலீட்டாளா்கள் டிவிடெண்ட் அல்லது பங்குகளை திரும்ப பெறுதல் மூலம் உடனடி வருமானத்தை விரும்பலாம். பங்குதாரர்கள் பார்வை எப்படி இருந்தாலும், பஃபெட்டின் உத்தி நீண்ட கால மதிப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது, இது வரலாற்று ரீதியாக பங்குதாரர்களுக்கு பயன் அளித்துள்ளது.
Story written : subramanian


Click it and Unblock the Notifications