உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்கள் எதிர்கொண்டு வருகிறது. எஸ்அண்ட் பி குறியீட்டின் கீழ் டெஸ்லா நிறுவனத்தைச் சேர்த்த நாளில் இருந்து எலான் மஸ்க் சொத்து மதிப்பு தாறுமாறாக அதிகரித்து மிகவும் குறைந்த நாட்களில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். ஆனால் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பைசோஸ் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து வரும் காரணத்தாலும், பிற முன்னணி நிறுவனங்கள் லாக்டவுன்-க்கு பின்பு அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறும் காரணத்தால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யும் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்-யிடம் இழந்துள்ளார்.
லூயிஸ் உய்ட்டன் வர்த்தக வளர்ச்சி
வல்லரசு நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை வளர்ச்சி அடையத் துவங்கியுள்ள நிலையில் ஆடம்பர சந்தையின் வர்த்தகமும் அதிகரித்துள்ளது. இதன் வாயிலாகப் பல ஆடம்பர பிராண்டுகளை வைத்திருக்கும் லூயிஸ் உய்ட்டன் (LVMH) நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்தது.
பெர்னார்ட் அர்னால்ட் LVMH நிறுவனம்
இதன் வாயிலாகத் திங்கட்கிழமை இந்நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரிக்கத் துவங்கிய காரணத்தால் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அவரது குடும்பம் தலைமை வகிக்கும் லூயிஸ் உய்ட்டன் (LVMH) நிறுவனத்தின் மொத்த மதிப்பு 0.4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
பெர்னார்ட் அர்னால்ட் மொத்த சொத்து மதிப்பு
இதன் மூலம் பெர்னார்ட் அர்னால்ட்-ன் மொத்த சொத்து மதிப்பு அளவு 186.3 பில்லியன் டாலராக உயர்ந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் 186 பில்லியன் டாலர் உடன் ஜெப் பைசோஸ் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். 3வது இடத்தில் 147.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உள்ளார்.
அதிரடி வளர்ச்சி
மார்ச் 2020ல் பெர்னார்ட் அர்னால்ட்-ன் மொத்த சொத்து மதிப்பு 76 பில்லியன் டாலர் மட்டுமே, ஆனால் கடந்த 14 மாதத்தில் அதுவும் கொரோனா தொற்று, லாக்டவுன் ஆகியவை நிறைந்த காலகட்டத்தில் இவரது சொத்து மதிப்பு 110 பில்லியன் டாலர் அதிகரித்துத் தற்போது 186.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஆடம்பர பிராண்டுகள்
பெர்னார்ட் அர்னால்ட் தலைமை வகிக்கும் லூயிஸ் உய்ட்டன் (LVMH) நிறுவனத்தின் கீழ் தான் பென்டி, டியோர், கிவென்சே போன்ற பல முன்னணி பிராண்டுகள் உள்ளது. நேற்றை வர்த்தக உயர்வின் மூலம் லூயிஸ் உய்ட்டன் (LVMH) நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 320 பில்லியன் டாலராக உயர்ந்தது.
கைகொடுத்த சீனா
2021ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள சீனாவில் ஆடம்பர பொருட்களின் வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்த காரணத்தால் இந்நிறுவனம் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 17 பில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 32 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications