ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் பட்டியல் படி, உலகின் மிகப் பெரிய பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட்-இன் சொத்து மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 33 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பெர்னார்ட் அர்னால்ட் ஆடம்பர பொருட்களின் கூட்டு நிறுவனமான Moët Hennessy - Louis Vuitton இன் சிஇஓ மற்றும் இணை நிறுவனராக உள்ளார்.
பாரீஸ் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தைச் சுருக்கமாக LVMH என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பெர்னார்ட் அர்னால்ட்
ஆடம்பர உலகை கட்டியாளும் பெர்னார்ட் அர்னால்ட்-ன் சொத்து இந்த ஆண்டில் மட்டும் 33.7 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவருடைய சொத்து மதிப்பு அவரது மொத்தச் செல்வத்தில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ப்ளூம்பெர்க்
ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் LVMH நிறுவனத்தின் சிஇஓ-வான பெர்னார்ட் அர்னால்ட்-ன் தற்போதைய நிகர மதிப்பு 196 பில்லியன் டாலக் எனக் கணக்கிட்டு உள்ளது. 73 வயதான பிரெஞ்சு கோடீஸ்வரர் தற்போது ப்ளூம்பெர்க் பட்டியலில் உலகின் பணக்காரராகத் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
எலான் மஸ்க்
பெர்னார்ட் அர்னால்ட்-ஐ தொடர்ந்து இப்பட்டியலில் எலான் மஸ்க் 175 பில்லியன் டாலர் உடன் 2வது இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து 128 பில்லியன் டாலர் உடன் ஜெப் பெசோஸ் 3வது இடத்திலும், 117 பில்லியன் டாலர் உடன் பில் கேட்ஸ் 4வது இடத்திலும், 107 பில்லியன் டாலர் உடன் வாரன் பபெட் 5வது இடத்திலும் உள்ளனர்.
முக்கியப் பிராண்ட்
மார்க் ஜேக்கப்ஸ், கிவன்சி, மற்றும் மோயட் & சாண்டன் போன்ற பிராண்டுகளை வைத்திருக்கும் குழும நிறுவனத்தைப் பெர்னார்ட் அர்னால்ட் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதே போல் LVMH நிறுவனம் ஃபென்டி பியூட்டி நிறுவனத்தில் 50% பங்குகளையும் வைத்துள்ளது. இதுமட்டுமா இது லூயிஸ் உய்ட்டன், டிஃப்பனி & கோ. மற்றும் கிறிஸ்டியன் டியோர் ஆகிய ஆடம்பர பிராண்டுகளும் பெர்னார்ட் அர்னால்ட் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
டெல்ஃபின் அர்னால்ட்
LVMH நிறுவனத்தின் சிஇஓ-வான பெர்னார்ட் அர்னால்ட் சமீபத்தில் தனது மகள் டெல்ஃபின் அர்னால்ட்-ஐ டியோர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவராக நியமித்தார். 2013 முதல் லூயிஸ் உய்ட்டனின் நிர்வாகத் துணைத் தலைவராகப் பணியாற்றிய பின்னர், பிப்ரவரி 1 முதல் டியோர் நிறுவனத்தின் பெறுப்பேற்றினார்.
4 மகன்கள்
பெர்னார்ட் அர்னால்ட்-ன் நான்கு மகன்களும் LVMH நிறுவனத்தின் உயர் பதவிகளில் உள்ளனர். அன்டோயின் அர்னால்ட் LVMH ஹோல்டிங் நிறுவனமான கிறிஸ்டியன் டியோர் SE இன் CEO ஆவார்; அலெக்ஸாண்ட்ரே அர்னால்ட் Tiffany & Co. இல் ஒரு நிர்வாகத் துணைத் தலைவர்; ஃபிரடெரிக் அர்னால்ட் டேக் ஹியூரின் தலைமை நிர்வாக அதிகாரி; ஜீன் அர்னால்ட் லூயிஸ் உய்ட்டனில் கைக்கடிகாரங்கள் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குநராக உள்ளார்.
முகேஷ் அம்பானி, கௌதம் அதானி
இதே ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் பட்டியலில் முகேஷ் அம்பானி 80.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 12வது இடத்தில் உள்ளார். கௌதம் அதானி 59 பில்லியன் டாலர் உடன் 21வது இடத்தில் உள்ளார். இதன் மூலம் டாப் 20 இடத்தில் ஒரு இந்தியர் மட்டுமே உள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications