ஒரு சிறு ஐடியாவை வைத்து தொழில் தொடங்கி பின்னர் அதை மிகப் பெரிய தொழில் நிறுவனமாக மாற்றிய பல சாதனை மனிதர்கள் இந்தியாவில் உள்ளனர்.
அப்படி 2010 ஆம் ஆண்டு இந்தியாவை சுற்றிப் பார்க்க வந்த ஒரு அமெரிக்கர் இங்கு வெற்றிகரமாக ஒரு சிற்றுண்டி உணவகத்தை அமைத்துள்ளார். அவரது பெயர் பெர்ட் முல்லர். அமெரிக்க தொழிலதிபர்.

தரம் கல்சா, கேலியன் டிரேப்பர் என்ற இரு அமெரிக்கர்களுடன் சேர்ந்து கலிபோர்னியா பரிட்டோ என்ற உணவகத்தை பெர்ட் முல்லர் தொடங்கினார். இன்றைக்கு கலிபோர்னியா பரிட்டோ 50 இடங்களில் இயங்குகிறது. ஆண்டுக்கு சுமார் 110 கோடி ரூபாய் வருமானத்தைப் பெறுகிறது. கலிபோர்னியா பரிட்டோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
2011 ஆம் ஆண்டிலிருந்து பரிட்டோ ரெஸ்டாரன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராக முல்லர் உள்ளார். அதற்கு முன்னர் அமெரிக்காவின் சௌத்வெஸட் கிரில்லில் அவர் வேலை செய்தார். வில்லியம் மேரி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
தொழிலுக்காக அவர் 15 டாலர்களை முதலீடு செய்தார். அத்துடன் 2,50,000 டாலர்களை நண்பர்கள் குடும்பத்தாரிடமிருந்து சேகரித்தார். Tumblr பிளாக்கை வைத்து முதலீடுகளை சேர்த்தார். ஸ்டார்ட் அப்பாக தனது தொழில் பயணத்தை தொடங்கினார்.
2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு முல்லர் முதன் முறையாக வந்தார். தொடக்கத்தில் அவரது இரு நண்பர்களுடன் சேர்ந்து குர்காவனில் ஒரு உணவகத்தை தொடங்கினார். பின்னர் பெங்களூருக்கு குடி பெயர்ந்தனர். அங்கு நில மதிப்பு குறைவாக இருந்ததே காரணம். முல்லரும் டிரேப்பரும் முதல் ஆறு மாதங்களுக்கு அவர்களே பரிட்டோக்களை செய்து விற்றனர்.
சென்னையில் கடந்த மே மாதம் தனது வெற்றிகரமான கிளையை கலிபோர்னியா பரிட்டோ தொடங்கியது. இப்போது பெங்களூரு, என்சிஆர், ஹைதராபாத், சென்னையில் கிளையை பரப்பியுள்ளது.
கலிபோர்னியா பரிட்டோவின் தயாரிப்புகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விற்பனை சக்கைப்போடு போடுவதால் லாபம் கொட்டுகிறது.
இந்த நிதியாண்டில் அவரது கலிபோர்னியா பரிட்டோ ரூ.110 கோடியை சம்பாதித்துள்ளது. கலிபோர்னியா பரிட்டோ கிளைகளில் வேறு பல முக்கிய நகரங்களிலும் தொடங்குவதற்கு முல்லர் திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications