ரூ.1 லட்சம் முதலீட்டை ரூ.5 லட்சமாக மாற்றிய MF! 5 ஆண்டுகளில் அதிக வருமானம் தந்த டாப் 5 ஃபண்டுகள்!

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது லாபத்தை அதிகரிக்கும் என்று பலருக்கும் தெரியும். சில நேரங்களில் எதிர்பாராத விதமாக லாப விகிதம் அதிகரிக்கலாம். சில நேரங்களில் நஷ்டமும் ஏற்படலாம். இந்த பதிவில் கடந்த 5 ஆண்டுகளில் திறம்பட செயல்பட்ட 5 ஸ்மால் கேப் ஃபண்டுகளைப் பற்றி தான் பார்க்க உள்ளோம். இவை 5 ஆண்டுகளில் மட்டும் 27 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளதாக மியூச்சுவல் ஃபண்டின் தொழில்துறை அமைப்பான AMFI-யின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு முதலீட்டாளர் இந்த 5 ஸ்மால் கேப் ஃபண்டுகளிலும் ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் இன்று லட்சாதிபதி ஆகியிருப்பார். குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் ஆண்டு வருமானமாக 40 சதவீதமும், நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 29.52 சதவீதமும், பாங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 28.77 சதவீதமும், டாடா ஸ்மால் கேப் ஃபண்ட் 28.31 சதவீதமும் மற்றும் கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் 27.42 சதவீதமும் வருமானம் வழங்கியுள்ளன.

ரூ.1 லட்சம் முதலீட்டை ரூ.5 லட்சமாக மாற்றிய MF! 5 ஆண்டுகளில் அதிக வருமானம் தந்த டாப் 5 ஃபண்டுகள்!

குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்-இல் ரூ. 1 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்திருந்தால் எவ்வளவு வருமானம்?: குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்டில் மொத்தமாக ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், 5 ஆண்டுகளில் 40 சதவீத வருமானத்தை பெற்றிருக்கலாம். குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்டு சிறந்த செயல்திறனை வழங்கியுள்ளதாக ஏஎம்எஃப்ஐ தரவுகள் தெரிவிக்கிறது. இதில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் தோராயமாக ரூ. 5.38 லட்சத்தை பெற்றிருக்கலாம்.

நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்-இல் ரூ. 1 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்திருந்தால் எவ்வளவு வருமானம்?: இந்த ஃபண்டில் ஒருவர் ரூ.1 லட்சத்தை மொத்தமாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் முதலீடு செய்திருந்தால் 29.52 சதவீத வருடாந்திர வருமானத்தைப் பெற்றிருக்கலாம். தற்போது ரூ.1 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு ரூ. 3.64 லட்சம் கிடைத்திருக்கும்.

பாங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்-இல் ரூ. 1 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்திருந்தால் எவ்வளவு வருமானம்?: இந்த ஃபண்டு 5 ஆண்டுகளில் 28.77 சதவீத வருவாயை அளித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது ரூ. 3.54 லட்சமாக வளர்ந்திருக்கும்.

டாடா ஸ்மால் கேப் ஃபண்ட்-இல் ரூ. 1 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்திருந்தால் எவ்வளவு வருமானம்?: டாடா ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 28.31 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த ஃபண்ட்-இல் ரூ. 1 லட்சம் மொத்தமாக முதலீடு செய்திருந்தால் ரூ. 3.48 லட்சம் கார்பஸை பெற்றிருக்கலாம்.

கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட்-இல் ரூ. 1 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்திருந்தால் எவ்வளவு வருமானம்?: இந்த ஃபண்ட் 5 ஆண்டுகளில் 27.42 சதவீத வருவாயை பதிவு செய்துள்ளது. ரூ. 1 லட்சம் முதலீடு சுமார் ரூ. 3.36 லட்சமாக வளர்ந்துள்ளது.

SIP வருமானம்: கடந்த 5 ஆண்டுகளில் மாதம் மாதம் ரூ.1,000 என்ற வீதத்தில் எஸ்ஐபி முதலீடு செய்திருந்தால் எவ்வளவு லாபம்? என்று பார்ப்போம். 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து 1,000 ரூபாய் என்றால் மொத்தமாக 60,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்-இல் மாதம் ரூ. 1,000 எஸ்ஐபி முதலீடு செய்திருந்தால் 32.47 % வருமானத்தில் 1,33,151 ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்-இல் மாதம் ரூ. 1,000 எஸ்ஐபி முதலீடு செய்திருந்தால் 38.45 சதவீத வருமானத்தில் 1,51,064 ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும்.

பாங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்-இல் மாதம் ரூ. 1,000 எஸ்ஐபி முதலீடு செய்திருந்தால் 29 சதவீத வருமானத்தில் 1,35,200 ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். டாடா ஸ்மால் கேப் ஃபண்ட்-இல் மாதம் ரூ. 1,000 எஸ்ஐபி முதலீடு செய்திருந்தால் 35.71 சதவீத வருமானத்தில் 1,66,419 ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட்-இல் மாதம் ரூ. 1,000 எஸ்ஐபி முதலீடு செய்திருந்தால் 30.36 சதவீத வருமானத்தில் 1,40,937 ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+