இந்திய சந்தையில் நாள்தோறும் புது புது ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தைக்கு ஏற்ப பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்கின்றன அந்த வகையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் கிடைக்கக்கூடிய 5g ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இந்த கட்டுரையின் விரிவாக பார்க்கலாம்.
ரியல் மீ 12 5ஜி (Realme 12 5G): மீடியா டெக் டைமென்சிட்டி பிராசசர் கொண்ட இந்த போன் 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா கொண்டுள்ளது. செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல் கொண்டிருப்பதால் வீடியோ மற்றும் புகைப்படம் சிறப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 5,000mAh பேட்டரி மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் சார்ஜரும் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம்/128 ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.16,999க்கும், 8 ஜிபி ரேம்/128 ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.17,999க்கும் கிடைக்கிறது.

ரெட் மீ நோட் 13 5ஜி( Redmi Note 13 5G): சிறந்த கேமராவுடன் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இது. 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் சார்ஜரும் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேபி/ 128 ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.18,999க்கு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம்/128 ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.20,999க்கும் கிடைக்கிறது.
சாம்சங் எஃப் 15 5ஜி( Samsung F15 5G ): 6.5 இன்ச் Full HD டிஸ்பிளே கொண்ட இந்த போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை ஸ்டோரேஜை விரிவுபடுத்தலாம். இந்த போனின் 4 ஜிபி ரேம் , 128 ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது, 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.14,999க்கு விற்கப்படுகிறது.
ஐகியூஓஓ (iQOO Z9 5G) : மீடியாடெக் டைமென்சிட்டி 7200 சிப்செட்டுடன் கிடைக்கும் இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை ஸ்டோரேஜை விரிவுபடுத்தலாம். 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் , 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.19,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போகோ எக்ஸ்6 நியோ (Poco X6 Neo): 6.67 இன்ச் டிஸ்பிளே மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 6080 சிப் செட்டுடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. இதன் விலை ரூ.15,999 ஆகும். அதே போல 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.17,999க்கு கிடைக்கிறது.
Story Written by: devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications