தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர், பலத்த போட்டிகள் நிலவி வருகின்றன. ஆனால் இந்த பலமான போட்டிகளுக்கும் மத்தியில் பல சலுகைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
ஏனெனில் ஒவ்வொரு நிறுவனமும் தான் சிறந்த நெட்வொர்க் என காட்டிக்கொள்ள, பல அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன.
அதிலும் ஜியோவின் போட்டியை சமாளிக்க ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களது லாபத்தினையும் மறந்து, பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.
வருட ரீசார்ஜ் திட்டங்கள்
அந்த வகையில் இன்று சிறந்த வருட திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள். பொதுவாக இந்த மாதிரியான திட்டங்களை அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. அதோடு கட்டணமும் குறைவு என்பதால், பல மக்கள் இது போன்ற திட்டங்களை எதிர்பார்க்கின்றனர். அதிலும் கிராமப்புறங்களில் இந்த திட்டங்களுக்கு நல்ல மவுசு உண்டு.
ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்
ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்டவற்றை பெற முடியும். எனினும் இந்த திட்டத்தில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 100 இலவச எஸ்எம்எஸ்-களுக்கு பின்பு, அடுத்து ஒவ்வொரு எஸ்எம்எஸ்-ஸூக்கும் 1 ரூபாய் கட்டணமாகும். கூடுதலாக ZEE5 பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கான இலவச அனுகலையும் வழகுகிறது.
ஏர்டெல்லின் மற்றொரு வருட ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் மற்றொரு திட்டமான 2,698 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 1 வருடத்திற்கு இலவச டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் விஐபியை அணுகலைப் பெறலாம். மேற்கண்ட திட்டத்தில் உள்ள அனைத்து சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
பிஎஸ்என்எல்-லின் வருட திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் 1,999 ரூபாய்க்கு வருட திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 3ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த டேட்டா முடிந்த பிறகு 80kbps வேகத்திற்கு மாறுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 இலவச டேட்டா கிடைக்கிறது.
வீ-யின் வருட ரீசார்ஜ் திட்டங்கள்
வீ-யின் சிறந்த வருட ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்று 2,595 ரூபாயாகும். இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் கால்ஸ் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா என அனைத்தும் மற்ற நிறுவனங்களைப் போன்றே கிடைக்கிறது. அதோடு ஜீ எண்டர்டெயின்மென்ட், வீ மூவிஸ் & டிவி உள்ளிட்ட சேவைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தினை மார்ச் 31, 2021 வரை கிடைக்கிறது.
வீ-யின் வருட திட்டங்கள்
வோடபோன் இது தவிர மற்றொரு வருட திட்டத்தினையும் வழங்குகிறது. இந்த திட்டத்தினை பெற 2,399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இதில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால், இலவச எஸ் எம் எஸ் உள்ளிட்டவை மேற்கண்ட திட்டத்தினை போலவே கிடைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஜீ பிரிமீயம் சேவை மட்டும் இல்லை.
ஜியோவின் வருட திட்டம்
ஜியோவின் வருட திட்டத்தினை பொறுத்தவரையில் 2,399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ் எம் எஸ் உள்ளிட்டவை கிடைக்கும். இந்த 2ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64KBPS ஆக டேட்டா வேகம் குறையும். இந்த திட்டத்தில் ஜியோ ஆப்பிற்கான இலவ்ச சந்தாவினையும் வழங்குகிறது.
ஜியோவின் மற்றொரு வருட திட்டம்
இதே ஜியோவின் 2,599 ரூபாய் மதிப்பிலான வருடாந்திர திட்டத்தில், வரம்பற்ற கால் சேவை, தினசரி 2 ஜிபி டேட்டா நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக இந்த திட்டத்தில் ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவானது முற்றிலும் இலவசமாக கிடைக்கும். அதோடு ரோல் ஒவர் டேட்டவாக 10 ஜிபி கிடைக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications