பெரும்பாலும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் "Best before date", "Expiry date" மற்றும் "Use by" என 3 வகையான தேதிகள் அச்சிடப்பட்டிருக்கும். இந்த 3 தேதிகளுக்குமான வித்தியாசம் பலருக்கும் தெரிவதில்லை. சிலர் இந்த 3 தேதிகளும் ஒன்றுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான உணவுப் பொருட்களில் "Best before date" என்ற தேதி தான் கொடுக்கப்பட்டிருக்கும். உண்மையிலேயே இந்த தேதிக்குப் பிறகு அந்த குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் வீணாகி விடுமா? எதற்காக ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாதிரியான வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.. அதற்கான அர்த்தம் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
FSSAI அறிவுறுத்தலின்படி, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும், அவற்றில் உள்ள லேபிள்களைப் படிப்பது மிகவும் முக்கியமானது. சில உணவுகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பாக்டீரியா வளர்ச்சிக்கு காரணமாகிறது. எனவே கண்டிப்பாக லேபிளைப் படித்துதான் ஒரு உணவுப் பொருளை பயன்படுத்த வேண்டும்.

Best before date: பெரும்பாலும் குக்கீஸ், சீஸ், பிரட், கேக் போன்ற உணவுப் பொருட்களில் இந்த "Best before date" என்ற தேதி தான் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த குறிப்பிட்ட தேதி வரைக்கும் தான் உணவுப் பொருள் சத்துடையதாகவும், நல்ல சுவையுடையதாகவும் இருக்கும். இந்தத் தேதிக்கு பிறகு அந்த குறிப்பிட்ட உணவின் தரம், சுவை மற்றும் மிருதுவான தன்மை ஆகியவை ஒரே மாதிரியாக இருக்காது என்பதை இது குறிக்கிறது.
இந்த "Best before" தேதிக்குப் பிறகு ஒரு பொருளை பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அப்படி நீங்கள் குறிப்பிடப்பட்ட "Best before" தேதிக்குப் பிறகு ஒரு உணவுப் பொருளை பயன்படுத்தினால், அதில் எந்தவித சத்துக்களும் இருக்காது. மேலும்
இந்தத் தேதிக்கு பிறகு 2 முதல் 3 நாட்கள் கழித்து பயன்படுத்தினால், அதில் பூசணம் பிடிப்பதற்கும் வாய்ப்புள்ளது. எனவே "Best before" தேதிக்குப் பிறகு ஒரு பொருளை உபயோகப்படுத்துவது தான் பரிந்துரைக்கப்படுகிறது.
Expiry date: எக்ஸ்பயரி டேட் என்பது அந்த குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு அந்த உணவுப் பொருட்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்பதை குறிக்கிறது. மேலும் இதைத் தாண்டி நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
Use By: இந்த "Expiry date" மற்றும் "Use By" ஆகியவை உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை குறிப்பிடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டும் ஒரே அர்த்தத்தை தான் குறிக்கின்றன.
இரண்டிற்கும் ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட உணவு பொருள் 10 ஏப்ரல் 2024 அன்று பேக் செய்யப்பட்டிருக்கிறது. அந்த பேக்கேஜ் செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்களுக்கு அந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தலாம். அதாவது "Best before" தேதியிலிருந்து 3 மாதங்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியானால் நீங்கள் ஜூலை 10 2024-க்குள் அந்த உணவுப் பொருளை பயன்படுத்தி விட வேண்டும். அந்த தேதிக்குப் பிறகு அந்த உணவுப் பொருளின் மிருதுவான தன்மை, சத்துக்கள் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டாக இருந்தால் அவற்றின் மொறுமொறுப்பு ஆகியவை இருக்காது. அதுவே எக்ஸ்பயரி தேதி என்றால் அதன் பின் நீங்கள் அந்த பொருளையும் பயன்படுத்தவே கூடாது என்பது தான் அர்த்தம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications